நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

நகை வணிகத்தில் அந்நியத் தொழிலாளர் பற்றாக்குறை இல்லையா? : டத்தோ அப்துல் ரசூல் சாடல்

கோலாலம்பூர்:

நகை வணிகத்தில் அந்நியத் தொழிலாளர் பற்றாக்குறை இல்லை என்ற செய்தியை மலேசிய இந்தியர் பொற்கொல்லர், நகை வணிகர் சங்கத் தலைவர் டத்தோ அப்துல் ரசூல் சாடினார்.

நகை வணிகம் உட்பட மூன்று இந்திய பாரம்பரிய தொழில் துறைகள் அந்நியத் தொழிலாளர் பிரச்சினையை எதிர்நோக்கி வருகின்றன.

இந்த பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று துணையமைச்சர் டத்தோ ரமணன் கூறியிருந்தார்.

இந்நிலையில் இத் துறையில் அந்நியத் தொழிலாளர்கள் பற்றாக்குறை ஏதும் இல்லை. அப் பிரச்சினைக்கு எல்லாம் தீர்வு காணப்பட்டுவிட்டது என்று மலேசிய நகை வணிக சங்கங்களின் கூட்டமைப்பின் தலைவர் சியா ஹோக் இயோ கூறியுள்ளார். இது மிகவும் வருத்தத்திற்குரிய செய்தி மட்டுமல்ல கண்டிக்கத்தக்க செய்தியாகும். உண்மை நிலவரம் தெரியாமல் அவர் பேசியுள்ளார்.

சீன நகை வணிகத்திற்கு எந்த பிரச்சினையும் இல்லை. காரணம் அவர்கள் நகைகளை வாங்குவது விற்பது போன்ற வியாபாரங்களை மட்டுமே மேற்கொண்டு வருகின்றனர்.

ஆனால் இந்திய நகை தொழில் துறைக்கு பாரம்பரியமாக நகைகள் செய்வதற்கு இன்னமும் தொழிலாளர் பற்றாக்குறையை எதிர்நோக்கி இருக்கின்றோம். நாங்கள் நமது பாரம்பரிய அடிப்படையில் நகைகளை செய்து வருகின்றோம்.

இதன் அடிப்படையில் தான் இந்தியாவின் தமிழ் நாட்டில் இருந்து நகை தொழிலாளர்களை பெறுவதற்காக பல ஆண்டுகள் போராடி வருகிறோம்.

பல பிரதமர்கள் அமைச்சர்கள் மாறியும் எங்களின் பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கவில்லை என்ற மன உளைச்சலில் இருந்து வருகிறோம்.

இந்த நிலையில் கூட்டமைப்பின்  செய்தியால் எங்களுக்கு எந்த பாதிப்பும் வந்து விடக் கூடாது.

தற்போதைய மடானி ஆட்சியாவிலாவது எங்களுக்கு முழுமையான தீர்வு கிடைக்கும்  என்ற நம்பிக்கையில் உள்ளோம்.

தொழில் முனைவோர் மேம்பாடு கூட்டுறவுத் துறை துணையமைச்சர் டத்தோ ரமணன் போன்றோர் எங்களுக்கு உதவ முன்வந்துள்ளனர்.

அம் முயற்சி இதுபோன்ற செய்திகளால் பலவீனமடைந்து பாழாகி  விடக்கூடாது என்று டத்தோ அப்துல் ரசூல் நம்பிக்கைக்கு அளித்த நேர்காணலில் கூறினார்.

பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset