நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

உலகின் முக்கிய இஸ்லாமிய அறிஞருடன் பிரதமர் சந்திப்பு

புத்ராஜெயா:

பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் குவைத்தைச் சேர்ந்த உலகின் முக்கிய இஸ்லாமிய சிந்தனையாளராக கருதப்படும் ஷேக் தாரேக் அல்-சுவைடனுடன் சந்திப்பு நடத்தினார்.

இந்த சந்திப்பில்  சமச்சீர் அணுகுமுறை, தலைவர்களிடையே அதிகார துஷ்பிரயோகத்தை எதிர்த்துப் போராடும் அர்ப்பணிப்பை வலியுறுத்தும் மதானியின் கருத்து குறித்து தனது கருத்துக்களை அவர் பகிர்ந்து கொண்டார்.

மலேசியாவின் நிலைப்பாடும் பாலஸ்தீன நிலத்தில் நீதியை நிலைநாட்டுவதற்கான தொடர்ச்சியான முயற்சிகளையும் பிரதமர் வெளிப்படுத்தினார்.

ஷேக் தாரேக் குறிப்பாக தலைமைத்துவம், பன்முக சமூகத்தில் இஸ்லாமிய ஆட்சி, திட்டமிடல், மேலாண்மைத் துறையில் தொடர்ச்சியான அறிவுப் பகிர்வுகளில் கலந்துகொள்வதற்காக மலேசியா வந்திருப்பதாக அன்வார் கூறினார்.

இளைய தலைமுறையினரால் பயன்படுத்தக்கூடிய நேர்மறையான செய்திகள் மூலம் ஷேக் தாரேக்கின் முயற்சிகளுக்கு எனது பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறேன் என்றார் பிரதமர். 

பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset