நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

பாலஸ்தீனிய அரசை அங்கீகரிப்பதன் நோக்கில் ஜோர்டான் பிரதமரை சந்தித்தார் டத்தோஶ்ரீ அன்வார்

ரியாத்:

உலகப் பொருளாதார மன்றத்தின் சிறப்புக் கூட்டத்திற்கு வெளியே ஜோர்டான் பிரதமர் பிஷர் ஹானி அல்-கசாவ்னேவை பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் சந்தித்தார்.

இந்தச் சந்திப்பின் போது ​​ஐக்கிய நாடுகள் சபையில் பாலஸ்தீனிய அரசை அங்கீகரிப்பதன் முக்கியத்துவத்தை அவர் வலியுறுத்தினார்.

சுமார் 20 நிமிடங்கள் நடைபெற்ற இந்தச் சந்திப்பில், 

பாலஸ்தீனத்தில் இஸ்ரேலின் அட்டூழியங்களுக்குப் பொறுப்பேற்க வேண்டியதன் முக்கியத்துவத்தையும் பிரதமர் வலியுறுத்தினார்.

மேலும் பாலஸ்தீனியர்களுக்கு மனிதாபிமான உதவிகளை வழங்குவதில் ஜோர்டான் முக்கிய பங்காற்றியதற்காக மலேசியாவின் பாராட்டுகளையும் பிரதமர் தெரிவித்தார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset