நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

செலயாங் சந்தையில் சோதனை: 100 அந்நிய நாட்டினர் கைது

கோலாலம்பூர்:

செலயாங் காலை சந்தையில் அதிகாரிகள் மேற்கொண்ட சோதனையில் 108 அந்நிய நாட்டினர் கைது செய்யப்பட்டனர்.

இதனை கோலாலம்பூர் போலீஸ் தலைவர் டத்தோ அலாவூடின் அப்துல் மஜித் கூறினார்.

சட்டவிரோத அந்நிய நாட்டினரை ஒழிக்கும் நோக்கில் போலீசார் தொடர்ந்து சோதனைகளை நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் செலயாங் காலை சந்தையில் போலீசார் அதிரடி சோதனைகளை நடத்தினர்.

இந்த சோதனையில் கிட்டத்தட்ட 108 அந்நிய நாட்டிரை போலீசார் கைது செய்துள்ளனர். இதில் நான்கு பெண்களும் அடங்குவர்.

52 இந்தோனேசிய நாட்டினர், 32 மியன்மார் நாட்டினர், 12 இந்திய நாட்டினர், 7 வங்காளதேச நாட்டினர் ஆகியோரை போலீசார் கைது செய்துள்ளனர்.

பல்வேறு குற்றங்களின் அடிப்படையின் அவர்கள் கைது செய்யப்பட்டனர் என்று அவர் கூறினார்.

பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset