நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

கிரிப்டோ முதலீட்டில் பணி ஓய்வு பெற்றவர் 10 மில்லியன் ரிங்கிட்டை இழந்தார்

கோலாலம்பூர்:

கிரிப்டோ முதலீட்டில் பணி ஓய்வு பெற்ற வயதான மூதாட்டி ஒருவர் 10 மில்லியன் ரிங்கிட்டை இழந்தார். இதனை புக்கிட் அமான் வணிகக் குற்ற பிரிவு இயக்குநர் ரம்லி யூசுப் கூறினார்.

80 வயதான ஓய்வு பெற்றவர், முதலீட்டுத் திட்டத்தை விளம்பரப்படுத்திய வாட்ஸ் ஆப் குழுவில் சேர்க்கப்பட்ட பிறகு அந்த திட்டத்தில் நுழைந்தார்.

வாட்ஸ் ஆப் மூலம் சம்பந்தப்பட்ட கிரிப்டோகரன்சி வாங்குவதற்காக அம் மூதாட்டி தனது பணத்தை முன்பணம் செலுத்துவதாகக் கூறப்படும் ஒரு நபருடன் ஈடுபட்டுள்ளார்.

மேலும், பரிவர்த்தனை வெற்றிகரமாக முடிந்தவுடன் திருப்பிச் செலுத்தும்படி அவரிடம் கேட்கப்பட்டது.

தந்திரமாக  ஏமாற்றப்பட்டு, அம்மூதாட்டியின்  எட்டு வெவ்வேறு நிறுவனங்களின் பெயர்களில் பல வங்கிக் கணக்குகளுக்கு மொத்தம் 10 மில்லியன் ரிங்கிட் 13 வெவ்வேறு கணக்குகளில் பணம் செலுத்தினார்.

பல்வேறு காரணங்களுக்காக கூடுதல் பணம் செலுத்துமாறு கேட்டபோது, முதலீட்டின் நம்பகத்தன்மையை அவர் சந்தேகிக்கத் தொடங்கினார்.

இதனைத் தொடர்ந்து அவர் போலீசில் புகார் செய்துள்ளார் என்று அவர் கூறினார்.

பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset