நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

பாலஸ்தீன விவகாரத்தில் அனைத்துலக  நீதிமன்றத்தின் தீர்ப்பை  மலேசியா வரவேற்கிறது

புத்ராஜெயா:

பாலஸ்தீனத்தில் இஸ்ரேலின் நடவடிக்கைகள் மீதான அனைத்துலக நீதிமன்றத்தின் தீர்ப்பை மலேசியா வரவேற்கிறது.

காஸா பகுதியில் பாலஸ்தீனியர்கள் மீது நடத்தப்பட்ட அட்டூழியங்கள், மனித குலத்திற்கு எதிரான குற்றங்கள்,  இனப்படுகொலைகளுக்கு இஸ்ரேல் பொறுப்பேற்க வேண்டும்.

மலேசியாவின் இந்த  நிலைப்பாட்டை இந்த தீர்ப்பு உறுதிப்படுத்துகிறது.

அதன் அடிப்படையில் 1948 இனப்படுகொலை குற்றத்தைத் தடுத்தல்,  தண்டிப்பது தொடர்பான ஒப்பந்தத்தின் பயன்பாடு தொடர்பாக இஸ்ரேலுக்கு எதிராக தென் ஆப்பிரிக்கா தொடுத்த வழக்கில் சர்வதேச நீதிமன்றத்தின் தீர்ப்பை மலேசியா வரவேற்கிறது என்று வெளியுறவு அமைச்சு தெரிவித்துள்ளது.

இஸ்ரேலுக்கு எதிரான இனப் படுகொலை வழக்கை ஆராயும் அனைத்துலக நீதிமன்றத்தின் அடுத்த நடவடிக்கைகளை மலேசியா எதிர்நோக்குகிறது.

தென் ஆப்பிரிக்காவின் விண்ணப்பத்திற்கு மலேசியாவின் ஆதரவு தொடர்ந்து இருக்கும் என்று வெளியுறவு அமைச்சு கூறியது.

பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset