நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

கனடாவில் 15ஆவது உலகத் தமிழாசிரியர் மாநாடு: 500 தமிழாசிரியர்கள் பங்கேற்பு

பெட்டாலிங் ஜெயா:

கனடா உலகத் தமிழாசிரியர் மாநாட்டில் 500க்கும் மேற்ப்பட்ட தமிழாசிரியர்கள் கலந்து கொள்ளவுள்ளனர் என்று அதன் ஒருங்கிணைப்பாளர் சு. இராசரத்தினம் கூறினார்.

தமிழ்மொழி கற்றல் கற்பித்தல் அடிப்படையில் உலகத் தமிழாசிரியர் பேரவை, 1933 ஆம் தொடங்கி இன்று வரை பல கல்வி நிலையங்களுடன் இணைந்து பல்வேறு நாடுகளில் உலகத் தமிழாசிரியர் மாநாட்டை நடத்தி வருகின்றது.

அவ்வகையில் 15ஆவது மாநாடு  கனடா டொராண்டோ பல்கலைக்கழகம் ஸ்கார்புரோ வளாகத்தில் நடைபெற உள்ளது. 

மலேசியாவில் இருந்து தரமான கட்டுரைகளும், மலேசியப் பேராளர்களின் பங்களிப்பும் இம் மாநாட்டினை ஒவ்வொரு முறையும் மெருகூட்டி வருகின்றன. 

இம்முறை மலேசியப் பேராளர்களின் ஒருங்கிணைப்பினை மலாயாத் தமிழாசிரியர் சங்கமும், மலேசியத் தமிழ்மொழிக் காப்பகமும் ஏற்றுள்ளனர்.

கனடாவில் முதல் முறையாக நடக்கவிருக்கும் இம் மாநாட்டை படிமுறைத்தமிழ் ஒன்றியம் முன்னெடுக்கிறது.

இதில் படிமுறைத் தமிழ் எனும் புத்தகத்தில் எளிமையான தமிழ் கற்பித்தலை ஆசிரியர்களுக்குப் புரியும் வகையில் அமைத்துள்ளனர். 

இப் புதிய கற்றல், இன்று உலகிலுள்ள அனைத்து ஆசிரியர்களுக்கும் பயனாக உள்ளது. 

இக் கற்பித்தல் முறையைப் பின்பற்றும் கல்விநிலையங்களை அங்கத்தினர்களாகக் கொண்ட படிமுறைத்தமிழ் ஒன்றியம் எனும் அமைப்பையும் அவர் உருவாக்கியுள்ளனர். 

இதன் வழி தமிழ்மொழி கற்பித்தலை இலகுவாக்க முடியும் என்று ஆய்வின் அடிப்படையில் கூறுகிறார்.

இம்மாநாட்டை இனிதே நடத்த உலகத் தமிழாசிரியர் பேரவை அமைப்பும் இணைந்து செயல்படவுள்ளது. 

இம்மாநாட்டை மேலும் சிறப்பிக்க, சுமார் 500க்கும் மேற்ப்பட்ட ஆசிரியர்கள் கலந்து கொள்கின்றனர். 

300க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் ஆஸ்திரேலியா, சிங்கப்பூர், மலேசியா, தமிழ்நாடு, மொரிசியஸ், ஐரோப்பிய நாடுகள், தென் ஆப்பிரிக்கா போன்ற நாடுகளிலிருந்து பங்கேற்க உள்ளனர். 

தமிழ்மொழியின் வளர்ச்சியை மென்மேலும் வளர்க்கும் பொருட்டு இம் மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 

தமிழ்மொழியின் வளர்ச்சிக்கும், தமிழ்மொழியை அடுத்த தலைமுறையினருக்கும் கொண்டு செல்ல இம் மாநாடு துணை புரியும் என்று அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset