நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

Malaysian Unity Matters என்ற பரப்புரையை தைப்பூசத்தில் முன்னெடுக்கின்றனர் பினாங்கு மாநில மலேசிய இந்தியர் இளைஞர் மன்றம் 

பினாங்கு:

நாடு சுதந்திரம் அடைந்து 60 ஆண்டுகளுக்கு மேல் கடந்து விட்ட நிலையில் இன்றளவும் நம் நாட்டு மக்களின் நல்லிணக்கம், ஒற்றுமையைச் சீர்குலைக்கின்ற பல சம்பவங்கள் நடந்து வருகின்றன. 

நாம் அனைவரும் மக்கள் ஒற்றுமையாக வாழ வேண்டும் என்ற எண்ணத்தில் இருந்தாலும் தற்போதயை அரசியல் சூழல், சில பொறுப்பற்ற அரசியல் தலைவர்களின் பேச்சுகள் இவையாவும் நம்மிடையே இருக்கும் நல்லிணக்கத்தை பாதிக்கின்றன. 

இதனை கையாள மலேசியர்களாக நாம் ஒன்றுபட வேண்டும், இது நடக்குமாயின் அதன் மூலம் நாமும் நாடும் அடையவிருக்கும் மேம்பாடு மற்றும் வளர்ச்சியினை எடுத்துணர்த்தும் வகையில் Malaysian Unity Matters என்ற பரப்புரையை பினாங்கு தைப்பூசத்தின் வாயிலாக முன்னெடுக்கவுள்ளனர் பினாங்கு மாநில MIYC எனப்படும் மலேசிய இந்தியர் இளைஞர் மன்றம். 

ஏறக்குறைய 5000க்கும் மேற்பட்ட பல்லின மக்களிடம் இந்த பரப்புரையைக் கொண்டு சேர்க்க இலக்கு கொண்டுள்ள இந்த இளைஞர் இயக்கம் அதற்கான பதாகைகள், பரப்புரை கையேடுகள் ஆகியவற்றை தயார் செய்து மக்களிடையே தரவுள்ளனர்.

- தயாளன் சண்முகம் 

தொடர்புடைய செய்திகள்

+ - reset