நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

எச்ஆர்டி கோர்பின் தேசிய பயிற்சி வாரத்தில் 150,000 பேர் பங்கேற்பர்: ஸ்டீவன் சிம்

கோலாலம்பூர்:

எச்ஆர்டி கோர்பின் தேசிய பயிற்சி வாரத்தில் 150,000 பேர் பங்கேற்பார்கள் என்று மனிதவள அமைச்சர் ஸ்டீவன் சிம் கூறினார்.

மலேசியர்கள் அனைத்து துறைகளிலும் நிபுணத்துவம் பெற வேண்டும் என்ற அடிப்படையில் எச்ஆர்டி கோர்ப் இந்த தேசிய பயிற்சி வாரத்தை நடத்தி வருகிறது.

அவ்வகையில் இவ்வாண்டுக்காக இப் பயிற்சி வாரம் வரும் ஜூன் 24ஆம் தேதி முதல் 30ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.

கடந்தாண்டு 500,000 மணி நேர பயிற்சியின் வாயிலாக 130,000 பேர் பயன் பெற்றனர். 21,000 பயிற்சிகள் வழங்கப்பட்டது.

இந்த வெற்றியை தொடர்ந்து இவ்வாண்டு 25,000 பயிற்சித் திட்டங்கள் வழங்கப்படவுள்ளது.

இதில் 150,000 பேர் கலந்து பயன் பெறுவார்கள் என்ற நம்பிக்கை மனிதவள அமைச்சுக்கு உள்ளதாக அமைச்சர் ஸ்டீவன் சிம் கூறினார்.

எச்ஆர்டி கோர்ப்பில் தேசிய பயிற்சி வாரத்தின் அறிமுக விழா நேற்று தலைநகரில் நடைபெற்றது.

எச்ஆர்டி கோர்ப் தலைமை இயக்குநர் டத்தோ ஷாகுல் ஹமீத் தாவூத் உட்பட பலர் இதில் கலந்து கொண்டனர்.

- பார்த்தின் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset