நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

பத்துமலையில் மின் படிக்கட்டு திட்டத்திற்கு முழு ஆதரவு; பிப்ரவரி முதல் வாரத்தில் மண்டபத்திற்கு அடிக்கல் நாட்டப்படும்: மந்திரி புசார்

பத்துமலை:

பத்துமலையில் மின் படிக்கட்டு நிர்மாணிப்பதற்கான திட்டத்திற்கு மாநில அரசு முழு ஆதரவு வழங்கும்.

அதே வேளையில் பிப்ரவரி முதல் வாரத்தில் மண்டபத்திற்கு அடிக்கல் நாட்டப்படும் என்று சிலாங்கூர் மாநில மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிரூடின் ஷாரி கூறினார்.

ஒவ்வொரு ஆண்டும் தைப்பூச விழா பத்துமலையில் விமரிசையாக கொண்டாடப்படுகிறது.

கிட்டத்தட்ட 2 மில்லியன் பேர் இவ்வாண்டு திரள்வார்கள் என கணிக்கப்பட்டு உள்ளது.

இந்நிலையில் மாநில அரசாங்கத்தின் தைப்பூசா விழாவும் இம்முறை பத்துமலை வளாகத்தில் நடைபெற்றது.

அதே வேளையில் பத்துமலையில் தேவஸ்தானத்தில் ஏற்பாட்டில் நடைபெற்ற நிகழ்விலும் மந்திரி புசார் உரையாற்றியதாவது,

மலேசியாவில் பல்லின மக்கள் வாழ்ந்து வருகின்றனர். இம்மக்கள் எந்தவொரு பாகுபாடின்றி ஒற்றுமையுடன் வாழ்கின்றனர்.

குறிப்பாக தைப்பூச விழாவின் கொண்டாட்டங்களை மற்ற இன மக்கள் புரிந்து கொள்கின்றனர்.

அதே போன்று முஸ்லிம் மக்களின் தியாகப் பெருநாளை மற்ற இன மக்கள் புரிந்து கொள்கின்றனர்.

இது தான் மலேசியர்களின் கலாச்சாரம். ஒற்றுமை. இது தொடர வேண்டும்.

மேலும் மக்களிடையே இனவாதத்தை தூண்டும் தலைவர்களை மக்கள் புறக்கணிக்க வேண்டும் என்று டத்தோஸ்ரீ அமிரூடின் கூறினார்.

கோலாலம்பூர் ஸ்ரீ மகா மாரியம்மன் தேவஸ்தானத்தின் தலைவர் டான்ஸ்ரீ நடராஜாவும் இதர தலைவர்களும் பத்துமலையில் மின் மடிக்கட்டு, 3 ஆயிரம் பேர் அமரும் மண்டபம் ஆகியவற்றால் திட்டம் குறித்து என்னிடம் கோரிக்கையை முன்வைத்தனர்.

இதில் மின் படிக்கட்டு கட்டும் சிலாங்கூர் மாநில அரசு, செலயாங் நகராண்மைக் கழகம், நில அலுவலகம் என அனைத்தும் முழு ஆதரவை தருகிறது.

இருந்தாலும் இந்த திட்டத்திற்கு சுற்றுச் சூழல் துறையின் அனுமதி  பெற வேண்டும்.

அந்த அனுமதியும் கிடைக்கும் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு.

மேலும் அனைத்தும் சரியாக நடந்தால் 3 ஆயிரம் அமரக் கூடிய மண்டபத்திற்கு அடிக்கல் நாட்டு விழா பிப்ரவரி முதல் வாரத்தில் நடக்கும்.

இதற்கான நடவடிக்கை துரிதமாக மேற்கொள்ளப்படும் என்று டத்தோஸ்ரீ அமிரூடின் ஷாரி கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset