நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

சுங்கத் துறை பணியாளர்களுக்குக் கொடுப்பணவு வழங்கப்படும் : பிரதமர் அன்வார் உறுதி 

புத்ராஜெயா: 

கடந்த ஆண்டு முழுவதும் சுங்கத்துறையின் சிறந்த அடைவுநிலையைக் கருத்தில் கொண்டு இவ்வாண்டு அவர்களுக்குக் கொடுப்பணவு வழங்கப்படும் என்று பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் உறுதியளித்துள்ளார்.

குறிப்பாக, வரி வசூல் நடவடிக்கையில் சுங்கத்துறையின் சிறப்பான பங்களிப்புகளைப் பாராட்டும் வகையில் இந்தக் கொடுப்பணவு வழங்கப்படும் என்றார். 

கணிசமான அளவு போதைப்பொருட்களை உள்ளடக்கிய கடத்தலை முறியடித்த சுங்கத் துறையின் பாராட்டுக்குரிய முயற்சிகளையும் தாம் கண்டதாகவும் அவர் கூறினார். 

இந்த ஆண்டு வழங்கப்படும் கொடுப்பணவு முந்தைய ஆண்டை விட அதிகமாக இருக்கும் என்றும் பிரதமர் உறுதியளித்தார். 

2023-ஆம் ஆண்டில், சுங்கத் துறையானது 55.1 பில்லியன் வருவாய் ஈட்டியுள்ளது. 

சுங்கத் துறை பணியாளர்களுக்கான வீட்டு வசதியை மேம்படுத்துவதற்காக 50 மில்லியன் வெள்ளி அதிகப்படுத்துவதாகவும் அன்வார் கூறினார்.

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

+ - reset