நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

பக்தர்கள் புடைசூழ பத்துமலையை நோக்கி வெள்ளி ரதம் இன்று புறப்படுகிறது

கோலாலம்பூர்:

தலைநகர் ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயத்தில் இருந்து வெள்ளி ரதம்  பத்துமலையை நோக்கி இன்று இரவு 9 மணிக்கு புறப்படவுள்ளது.

நாடு முழுவதும் தைப்பூச விழா வரும் ஜனவரி 25ஆம் தேதி கொண்டாடப்படவுள்ளது.

இதில் பத்துமலையில் இந்த விழா மிகவும் விமரிசையாக கொண்டாடப்படவுள்ளது.

இவ்வாண்டு தைப்பூச விழாவில் கிட்டத்தட்ட 2 மில்லியன் பேர் கலந்துக் கொள்வார்கள் என  கணிக்கப்பட்டுள்ளது.

உலக பிரசித்திப்பெற்ற பத்துமலை தைப்பூச விழாவில் வெள்ளி ரத ஊர்வலம்  முக்கிய அங்கமாக இருக்கும்.

அவ்வகையில் கோலாலம்பூர் ஸ்ரீமகா மாரியம்மன் ஆலயத்தில் இருந்து வெள்ளி ரதம் இன்று இரவு 9 மணிக்கு பத்துமலை நோக்கி புறப்படவுள்ளது.

இந்த ஊர்வலத்தில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

வெள்ளி ரத ஊர்வலத்தை முன்னிட்டு ஸ்ரீ மகா மாரியம்மன் தேவஸ்தானம் பல முன்னேற்பாடுகளை செய்துள்ளது.

அதே வேளையில் போலீசாரும் பாதுகாப்பு பணிகளை மேற்கொண்டு ஒரு சில சாலைகள் மூடப்படுகின்றன.

குறிப்பாக பக்தர்கள் போலீசாரின் அறிவுறைகளை பின்பற்றி நடந்து கொள்ளுமாறு தேவஸ்தான தலைவர் டான்ஸ்ரீ நடராஜா கேட்டுக் கொண்டார்.

பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset