நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் வணிகம்

By
|
பகிர்

Apple நிறுவனத்திற்கு ரஷ்ய அரசாங்கம் $13.6 மில்லியன் அபராதம்

மாஸ்கோ:

Apple நிறுவனம் ரஷ்ய அரசாங்கத்திடம் $13.6 மில்லியன் டாலர்களை (1.2 billion rubles) அபராதமாகச் செலுத்தியுள்ளது.

நிறுவனம் கைத்தொலைபேசிச் செயலிச் சந்தையில் தனது முன்னணி இடத்தைத் தவறாகக் கையாண்டதாக ரஷ்யா கூறியதையடுத்து அந்த அபராதம் விதிக்கப்பட்டது.

2022ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் ரஷ்யா உக்ரேன் மீது தாக்குதல் நடத்தத் தொடங்கிய பிறகு, நிறுவனம் ரஷ்யாவில் விற்பனையை நிறுத்தியது.

அங்கு வழங்கும் சேவைகளையும் குறைத்துக்கொண்டது.

தனது செயலித் தளத்துக்கு (App Store) வெளியே பொருள்களை வாங்கலாம் என்பதை நிறுவனம் வாடிக்கையாளர்களிடம் தெரிவிக்கவில்லை என்று ரஷ்ய அரசாங்க ஏகபோக உரிமை எதிர்ப்புப் பிரிவு சொன்னது.

அதைத் தெரிவிப்பதற்குச் செயலிகளுக்கும் நிறுவனம் தடை விதித்ததாகக் கூறப்பட்டது.

எனவே பிரிவு 2022ஆம் ஆண்டு ஜூலை மாதம் $13.6 மில்லியன் டாலர்களை அபராதத்தை விதித்தது.

அபராதம் குறித்து நிறுவனம் செய்த மேல்முறையீட்டை ரஷ்ய நீதிமன்றம் நிராகரித்தது.

நிறுவனம் செலுத்திய அபராதத் தொகை ரஷ்ய அரசாங்க வரவுசெலவுத் திட்டத்திற்கு மாற்றி விடப்பட்டதாக நேற்று (ஜனவரி 22) வெளியிடப்பட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.

ஆதாரம்: AFP

தொடர்புடைய செய்திகள்

+ - reset