நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

ஈப்போ தைப்பூசத்தை முன்னிட்டு கோயிலுக்குச் செல்லும் சாலைகள் மூடப்படுகின்றன 

ஈப்போ: 

ஈப்போ தைப்பூசத் திருவிழா கொண்டாட்டம் எதிர்வரும் ஜனவரி 24 முதல் ஜனவரி 27ஆம் தேதி வரை இந்து பெருமக்களால் கொண்டாடப்படவுள்ளது. 

வெள்ளிரத ஊர்வலம், காவடிகள் யாவும்  புந்தோங் ஶ்ரீமகா மாரியம்மன் ஆலயத்திலிருந்து புறப்பட்டு கல்லுமலை ஶ்ரீ சுப்ரமணியர் ஆலயத்திற்குச் சென்றடையும். 

புந்தோங் ஶ்ரீ மகா மாரியம்மன் ஆலயத்திலிருந்து வெள்ளிரதம் ஜனவரி 24ஆம் தேதி புதன்கிழமை காலை 6 மணிக்குப் புறப்படும் வேளையில் வெள்ளிரதம் கல்லுமலை ஶ்ரீ சுப்ரமணியர் ஆலயத்தை மதியம் 12 மணிக்கு வந்தடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

அத்துடன், தைப்பூசம் நிறைவு பெற்றவுடன் வெள்ளிரதம் கல்லுமலையிலிருந்து ஜனவரி 26ஆம் தேதி வெள்ளிக்கிழமை மாலை 4.30 மணிக்குப் புறப்படும் அதேவேளையில் சனிக்கிழமை காலை 9 மணிக்கு மாரியம்மன் ஆலயத்தைச் சென்றடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

இந்நிலையில், ஈப்போவில் கல்லுமலை சுப்ரமணியர் ஆலயத்தை நோக்கி செல்லும் பிரதான சாலைகள் மூடப்படவுள்ளன. ஜாலான் துன் பேராக்- ஜாலான் லஹாத், ஜாலான் லஹாத்- ஜாலான் சுல்தான் யூசோஃப், ஜாலான் ராஜா முசா அஸிஸ்- ஈப்போ மருத்துவமனை வட்டசாலை ஆகிய சாலைகள் மூடப்படுகிறது என்று ஈப்போ மாவட்ட காவல்துறை தரப்பு தெரிவித்தது.

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

+ - reset