நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

மக்கள் பிரச்சனைகளைத் தீர்ப்பதற்கு பதிலாக அரசியல் எதிரிகளை ஒடுக்குவதில் அன்வார் தீவிரம் காட்டுகிறார்: முஹைதின் 

பெட்டாலிங் ஜெயா: 

மக்களின் பொருளாதாரப் பிரச்சனைகளைத் தீர்ப்பதில் கவனம் செலுத்துவதை விட, தனது அரசியல் எதிரிகள் ஒடுக்கப்படுவதை உறுதி செய்வதில் பிரதமர் அன்வார் இப்ராஹிம் அதிக மும்முரமாக இருப்பதாகத் தேசியக் கூட்டணியின் தலைவர் முஹைதின் யாசின் கூறினார். 

அன்வார் ஆட்சிக்கு வந்து ஓராண்டுக்கு மேல் ஆகிய நிலையில், மக்கள் இன்னும் வாழ்வாதாரப் பிரச்சனைகளை எதிர்கொள்கின்றனர். 

பொருட்களின் சேவை வரி அதிகரிப்பு, மின்சாரக் கட்டண உயர்வு, மொத்த மானியங்கள் திரும்பப் பெறுதல், உள்ளூர் அரிசி விநியோகம் இன்மை போன்றவற்றால் மக்கள் பாதிக்கப்படுவதாகவும் முஹைதின் கூறினார். 

அன்வாரின் தலைமையின் கீழ் நாட்டின் வர்த்தகத்தின் அடைவுநிலையில் சரிவு ஏற்பட்டுள்ளது. 

முந்தைய ஆண்டு 231 பில்லியனுடன் ஒப்பிடும்போது இவ்வாண்டு 225.1 பில்லியனாகக் குறைந்துள்ளது என்றும் பாகோ நாடாளுமன்ற உறுப்பினருமான முஹைதின் கூறினார்.

தீவிரமடைந்து வரும் மக்களின் பிரச்சினைகளுக்கு முழுமையான தீர்வைப் பிரதமரால் இதுவரை வழங்க முடியவில்லை.

மக்கள் பிரச்சனைகளைத் தீர்ப்பதில் கவனம் செலுத்துவதை விட, அரசியல் எதிரிகள் ஒடுக்கப்படுவதை உறுதி செய்வதில் அவர் அதிக மும்முரமாக இருப்பதாகவும் அவர் சாடினார். 

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

+ - reset