நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

பத்து ஆராங்கில் கழிவுகள் எரியூட்டும் ஆலை: பொதுமக்கள் எதிர்ப்பு

பத்து ஆராங்:

பத்து ஆராங்கில் கட்டப்படவிருக்கும் கழிவுகள் எரியூட்டும் ஆலைக்கு அப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்பை தெரிவித்துள்ளனர்.

கிட்டத்தட்ட 300க்கும் மேற்ப்பட்ட குடியிருப்பாளர்கள் ஒன்றுக் கூடி இந்த எதிர்ப்பை தெரிவித்தனர்.

பண்டார் தாசேக் புத்ரியில் இன்று காலை  8 மணிக்கு அம்மக்கள் கூட தொடங்கினர்.

இந்த விவகாரம் தொடர்பில் சிலாங்கூர் மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிரூடின் ஷாரி எங்களை சந்திக்க வேண்டும் என அவர்கள் கோஷமிட்டனர்.

பத்து ஆராங்கில் இந்த ஆலை கட்டுப்படுவதால் தாசேக் புத்ரி, கோத்தா புத்ரி உட்பட பல பகுதியில் வசிக்கும் மக்கள் பாதிக்கப்படுவார்கள்.

இதன் அடிப்படையில் தான் மக்கள் கடும் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர்.

கடந்த 6 மாதமாக இந்த விவகாரம் தொடர்பில் மந்திரி புசாரை சந்திக்க நாங்கள் முயற்சித்து வருகிறோம்.

ஆனால் அவை அனைத்தும் தோல்வியில் தான் முடிந்தது என்று இக்குழுவின் பேச்சாளர் அப்துல் ஹனான் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset