நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

மலேசியாவின் புகழை அனைத்துலக ரீதியில் பரப்பும்  முயற்சி மகத்தானது: டத்தோ சிவராஜ்

கோலாலம்பூர்:

மலேசியாவின் புகழை அனைத்துலக ரீதியில் பரப்பும்  முயற்சி மகத்தானது என்று செனட்டர் டத்தோ சிவராஜ் கூறினார்.

ஷாடோபேக்ஸ், மசல் ரைடர்ஸ் குழுவைச் சேர்ந்த 7 பேர் நான்கு நாடுகளை அதிவேக மோட்டார் சைக்கிளில் வலம் வரவுள்ளனர்.

இன்று மலேசியாவில் தொடங்கி தாய்லாந்து, லாவோஸ், வியட்நாம் ஆகிய நாடுகளை ஆகிய நாடுகளுக்கு அவர்கள் மோட்டாரில் செல்லவுள்ளனர்.

இவர்கள் மற்ற நாடுகளுக்கு மோட்டாரில் செல்வது புதியது இல்லை.

ஆனால் இம்முறை மலேசியாவின் புகழை அனைத்துலக ரீதியில் பரப்ப வேண்டும் என்பதே இவர்களின் இப்பயணத்தின் நோக்கமாக உள்ளது.

அதே வேளையில் செல்லும் வழியில் தங்களால் முயன்ற உதவிகளையும் அவர்கள் செய்யவுள்ளனர்.

அவரிகளின் இந்த முயற்சி வெற்றி பெற எனது வாழ்த்துகள். பாதுகாப்பாக அவர்கள் நாடு திரும்ப வேண்டும். அதுவே எனது எண்ணம் என்று டத்தோ சிவராஜ் கூறினார்.

ஷாடோபேக்ஸ் குழுவைச் சேர்ந்த டத்தோ ஆனந்த், மசல் ரைடர்ஸ் குழுவைச் சேர்ந்த விஜய் தலைமையில் இப்பயணம் தொடங்கியது என்பது குறிப்பிடத்தக்கது.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset