நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

பெட்டாலிங் எஸ்டேட் ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலய மகா கும்பாபிஷேகம்: ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டனர்

பெட்டாலிங்ஜெயா:

பெட்டாலிங் எஸ்டேட் ஸ்ரீ மகா மாரியம்மன்  ஆலய மகா கும்பாபிஷேகம் மிகவும் விமரிசையாக நடைபெற்றது.

இவ்விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலன் கொண்டனர் என்று ஆலயத் தலைவர் டான்ஸ்ரீ ஹரிநாராயணன் கூறினார்.

100 ஆண்டுகள் மிகவும் பாரம்பரியமிக்க  பெட்டாலிங் எஸ்டேட் ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயம் எனது தலைமையிலான ஏழு பேர் அடங்கிய அறங்காவலர் குழு பராமரித்து வருகிறது. இவ்வாலயத்தின் திருப்பணிகள் சுமூகமாக நடந்து முடிந்தது.

May be an image of 7 people, flute, temple and wedding

இதனைத் தொடர்ந்து கும்பாபிஷேக விழா ஆயிரக்கணக்கான பக்தர்கள் புடைசூழ இன்று நடைபெற்றது.

தமிழ்நாடு மயிலாடுதுறையைச் சேர்ந்த சிவஸ்ரீ ஏ.வி. சுவாமிநாத சிவாசாரியார் தலைமையில் 30 க்கும் மேற்பட்ட சிவாச்சாரியார்கள் ஆகம முறைப்படி மகா கும்பாபிஷேகத்தை நடத்தி வைத்தனர்.

கும்பாபிஷேக விழாவை தொடர்ந்து ஆலயத்தில் மண்டலாபிஷேக பூஜைகள் நடைபெறும். ஆகவே பக்தர்கள் இப்பூஜைகளில் கலந்து கொள்ள வேண்டும்.

அதே வேளையில் ஆலய திருப்பணி, கும்பாபிஷேக விழா என அனைத்துக்கும் ஆதரவாக இருந்த அனைத்து நல்லுள்ளங்களுக்கும் ஆலயம் சார்பில் நன்றி என்று டான்ஸ்ரீ ஹரி நாராயணன் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன் 

தொடர்புடைய செய்திகள்

+ - reset