நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

பொது சேவைத் துறையில் பதவி வகித்த முதல் பெண்மணி டான்ஸ்ரீ தேவகி கிருஷ்ணன் காலமானார்

கோலாலம்பூர்:

மலேசிய பொது சேவைத் துறையில் பதவி வகித்த முதல் பெண்மணி என்ற சாதனையை படைத்த டான்ஸ்ரீ தேவகி கிருஷ்ணன் நேற்று இரவு காலமானார்.

இதனை அவரின் பேரனும் தொழில் முனைவோர் மேம்பாடு கூட்டுறவுத் துறை துணையமைச்சருமான டத்தோ ரமணன் உறுதிப்படுத்தினார்.

100 வயதான டான்ஸ்ரீ தேவகி கிருஷ்ணன் நேற்று இரவு 8 மணிக்கு காலமானார். 

அவரின் இறுதி சடங்கு குறித்து குடும்பத்தினர் விவாதித்து வருவதாக அவர் தெரிவித்தார்.

கடந்த 1952ஆம் ஆண்டு கோலாலம்பூர் மாநகர் மன்றத்தில் பதவி வகித்ததன் வாயிலாக அவர் அரசியலுக்குள் நுழைந்தார்.

அதே வேளையில் மஇகாவின் மூத்த உறுப்பினருமான அவர் அதே ஆண்டு பங்சார் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

பின்னர் அவர் மலாயா  சுதந்திரக் கட்சியில் சேருமாறு டத்தோ ஒன் ஜாஃபரால் அழைக்கப்பட்டார்.

இந்த கூட்டணியில் போர்ட்டிக்சனில் பிறந்த அவர் 1959ஆம் ஆண்டு செந்தூல் தொகுதியில் போட்டியிட்டார். ஆனால் அப்போது அவர் தோல்வி கண்டார்.

கடந்த 1969ஆம் ஆண்டு கலவரம் நடந்த போது மெர்டேகா அரங்கத்தில் அமைக்கப்பட்ட மருத்துவ மையத்திற்கு அவர் தலைமையேற்றார்.

அப்போது அவர் கலவரத்தில் பாதிக்கப்பட்ட சுமார் 3,500 பேர், வீடற்ற மக்களை கவனித்துக் கொள்ள நியமிக்கப்பட்டார்.

கடந்த 1999ஆம் ஆண்டு  குழந்தை பராமரிப்பு மசோதாவைத் திருத்தியதில் இவர் முக்கியப் பங்காற்றினார்.

மேலும் கோலாலம்பூரில் கார் ஓட்டிய முதல் இந்தியப் பெண்மணியும் தேவகி ஆவார்.

இவர் கடன்த 1998ஆம் ஆண்டு மறைந்த பி. கிருஷ்ணனை மணந்தார்.

கடுமையான சவால்களுக்கு மத்தியில் இலங்கை, சிங்கப்பூர் தேர்தல்களில் இரண்டு பெண்கள் வெற்றி பெற்றனர்.

இதுவே பிறகு தாம் அரசியலுக்கு வர தூண்டியது என்று டான்ஸ்ரீ தேவகி கிருஷ்ணன் ஒரு நேர்காணலில் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset