நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் கலைகள்

By
|
பகிர்

நடிகர் கமல்ஹாசனின் இந்தியன் 2 ஏப்ரலில் வெளியீடு 

சென்னை: 

நடிகர் கமல்ஹாசனின் இந்தியன் 2 திரைப்படம் எதிர்வரும் ஏப்ரல் மாதம் வெளியாகும் என்று படக்குழுவினர் தெரிவித்துள்ளதாக கோலிவூட் வட்டாரத்தில் கிசுகிசுக்கப்படுகிறது. 

1996ஆம் ஆண்டு இயக்குநர் ஷங்கர்- கமல்ஹாசன் கூட்டணியில் உருவான் இந்தியன் திரைப்படம் மாபெரும் வெற்றி திரைப்படமாக அமைந்தது. 

இந்நிலையில், அதன் இரண்டாம் பாகம் 2018ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு தற்போது நிறைவடைந்துள்ளது. இயக்குநர் ஷங்கர் தற்போது VFX GRAPHICS காட்சிகள் பணிகளில் வேலை செய்து வருவதாகவும் சொல்லப்படுகிறது. 

இந்தியன் 2 திரைப்படத்தை ஏப்ரல் மாதத்தில் வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. இந்தியன் 2 படத்தில் நடிகர்கள் விவேக், பாபி சிம்ஹா, சித்தார்த், ராகுல் ப்ரித் சிங், நெடுமுடி வேண்டு, டெல்லி கணேஷ் , சமுத்திரகனி மனோபாலா ஆகியோர் நடித்துள்ளனர். 

இந்தியன் 2 படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் ரவிசந்தர் இசையமைத்துள்ளார். லைக்கா நிறுவனம் இப்படத்தைத் தயாரித்துள்ளது. 

அண்மையில், இந்தியன் 2 படத்தின் ஒடிடி உரிமத்தை நெட்பிளிக்ஸ் ஒடிடி தளம் வாங்கியது என்பது குறிப்பிடத்தக்கது.

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

+ - reset