நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

பிரிக்பீல்ட்ஸ் ஸ்ரீ மகா முனீஸ்வரர் ஆலயத்தின் மகா கும்பாபிஷேக விழா ஜனவரி 21ல் விமரிசையாக நடைபெறும்

கோலாலம்பூர்:

பிரிக்பீல்ட்ஸ் ஸ்ரீ மகா முனீஸ்வரர் ஆலயத்தின் மகா கும்பாபிஷேக விழா ஜனவரி 21ல் நடைபெறும் என்று ஆலயத் தலைவர் தனுஜா கூறினார்.

இந்த ஆலயம் 127 ஆண்டுகள் வரலாற்றை கொண்டதாகும்.

ஆரம்பத்தில் இடம் மாற்றம் கண்டு ஆலயம் தற்போதைய பிரிக்பீல்ட்ஸ் ஜாலான் ஸ்கோட்டிற்கு கொண்டு வரப்பட்டது.

ஆலயத் தலைவராக விக்கி சிறப்பாக சேவையாற்றி வந்தார். அவருக்கு பின் என் தலைமையில் நிர்வாகம் அமைந்தது. பல சவால்களுக்கு மத்தியில் ஆலயத்தின் திருப்பணிகள் பூர்த்தியாகியுள்ளது.

இதனைத் தொடர்ந்து ஆலயத்தின் மகா கும்பாபிஷேக விழா வரும் ஜனவரி 21ஆம் தேதி காலை 9 மணி முதல் 11 மணிக்குள் மிகவும் விமரிசையாக நடைபெறவுள்ளது.

May be an image of 5 people, temple and text

நாட்டில் குறிப்பாக தலைநகரில் மிகவும் பிரசித்தி பெற்ற முனீஸ்வரர் ஆலயமாக இது விளங்குகிறது.

ஆகவே பக்தர்கள் திரளாக வந்து இந்த ஆலய கும்பாபிஷேக விழாவில் கலந்து கொள்ளுமாறு தனுஜா கேட்டுக் கொண்டார்.

கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு ஜனவரி 15ஆம் தேதி முதல் ஆலயத்தில் சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருகிறது.

நாளை பீடங்களில் தங்கம், வெள்ளி சாத்தப்படும். சனிக்கிழமை எண்ணெய் சாத்துதல் நிகழ்வு நடைபெறும்.

May be an image of 3 people and temple

அதனைத் தொடர்ந்து ஞாயிற்றுக்கிழமை மகா கும்பாபிஷேகம் நடைபெறவுள்ளது.

அனைத்து தெய்வங்களுக்கும் ஆலயங்களை கொண்டிருக்கும் புண்ணியத் தலமாக பிரிக்பீல்ட்ஸ் விளங்குகிறது.

அவ்வகையில் இந்த ஸ்ரீ முனீஸ்வரர் ஆலய கும்பாபிஷேக விழாவிலும் அதன் தொடர்ச்சியாக நடைபெறும் பூஜைகளிலும் பக்தர்கள் கலந்து கொள்ள வேண்டும் என்று ஆலயத்தின் தலைமை குருக்கள் கிரி கூறினார்.

பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset