நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

பேராக்கில் இரு வாரங்களில் 1,089 கோவிட்-19 நோய் தொற்று சம்பவங்கள் பதிவாகியுள்ளன

ஈப்போ : 

பேராக் மாநிலத்தில் ஜனவரி மாதத்தின் முதல் இரு வாரங்களில் 1,089 கோவிட்-19 நோய் தொற்று சம்பவங்கள் பதிவாகியிருப்பதாக மனிதவள, சுகாதாரம், இந்தியச் சமூக விவகாரங்கள் மற்றும் ஒருங்கிணைப்புக்கான மாநில ஆட்சிக் குழு சிவநேசன் தெரிவித்தார்.

கடந்த ஆண்டு இதே காலக்கட்டத்தில் 278 கோவிட்-19 நோய் தொற்று சம்பவங்கள் பதிவாகியிருந்தன. 

இந்த எண்ணிக்கை 291.7 சதவீதம் அதிகரித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். 

கோவிட்-19 நோய் தொற்று சம்பவங்கள் அதிகரிப்பதற்கு பள்ளி விடுமுறை காலம் ஒரு காரணமாக இருக்கலாம் என்றார் அவர். 

இருப்பினும், தற்போது நிலைமை கட்டுப்பாட்டில் இருப்பதாகவும் மாநிலச் சுகாதாரத் துறை தொடர்ந்து தற்போதைய நிலைமையை கண்காணிக்கும் என்று அவர் கூறினார்.

இன்று நடைபெற்ற மாநில அளவிலான டிங்கி காய்ச்சல் தடுப்புக் குழுக் கூட்டத்திற்கு பிறகு அவர் செய்தியாளர்களிடம் இதனைத் தெரிவித்தார்.

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

+ - reset