நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

சனூசியை உட்படுத்திய வழக்கு விசாரணை நடத்தப்படுமா அல்லது ஒத்திவைக்கப்படுமா? இன்று தீர்ப்பு

கோலாலம்பூர்: 

கெடா மாநில மந்திரி பெசாரை உட்படுத்திய வழக்கு விசாரணை செலாயாங் செஷன்ஸ் நீதிமன்றத்தில் தொடரப்படுமா இல்லையா என்பது குறித்து இன்று நடைபெறும் நீதிமன்ற அமர்வில் தெரிந்துவிடும் என்று சனூசி தரப்பு வழக்கறிஞர்கள் தெரிவித்தனர். 

சிலாங்கூர் மாநில மந்திரி பெசார் நியமனம், ஒற்றுமை அரசாங்கத்தின் உருவாக்கம் குறித்து அரசியல் பரப்புரையில் அவதூறு ஏற்படுத்தும் வகையில் பேசியதால் சனூசிக்கு எதிராக வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இந்நிலையில் தமக்கு எதிராக நடைபெற்று வரும் வழக்கு விசாரணை ஷாஆலாம் உயர்நீதிமன்றத்திற்கு மாற்ற வேண்டும் என்று அவர் விண்ணப்பம் மேற்கொண்டிருந்தார். 

மேலும், உயர்நீதிமன்றத்திற்கு வழக்கு விசாரணை மாற்றும் நடவடிக்கை முடிவடையும் வரை செஷன்ஸ் நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் வழக்கு விசாரணை ஒத்திவைக்க வேண்டும் என அவர் தமது விண்ணப்பத்தில் கேட்டுக்கொண்டார். 

டத்தோஶ்ரீ முஹம்மத் சனூசி மாட் நோர் இரு குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டுள்ளார். குற்றம் நிரூபிக்கப்பட்டல் 5 ஆயிரம் ரிங்கிட்டிற்கும் மேற்போகாத அபராதம் அல்லது மூன்றாண்டுகள் சிறைதண்டனை விதிக்கப்படும்.

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

+ - reset