நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

கருத்துவேறுபாட்டினால் ஏற்பட்ட சண்டையில் ஐவர் கைது

ஜொகூர் பாரு: 

கடந்த திங்கட்கிழமை பண்டார் பாரு பெர்மாஸ் ஜெயாவிலுள்ள ஓர் உணவகத்தின் முன் கருத்துவேறுபாடு காரணமாக ஐந்து ஆடவர்களிடையே சண்டை நிகழ்ந்துள்ளது. 

இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, நகரைச் சுற்றியுள்ள நான்கு வெவ்வேறு இடங்களில் நடத்தப்பட்ட சோதனை நடவடிக்கையில் ஐந்து சந்தேக நபர்களைக் காவல்துறையினர் கைது செய்துள்ளதாக தெற்கு ஜொகூர் பாரு மாவட்டக் காவல்துறைத் தலைவர், உதவி ஆணையர் ரவுப் செலாமாட் கூறியுள்ளார்.   

கைது செய்யப்பட்ட ஐவரும்  17 முதல் 43 வயதுடைய ஆடவர்களாவர்.

மேலும், கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து இரு ரோத்தான்களும் இரு கைத்தொலைப்பேசிகளும் பறிமுதல் செய்யப்பட்டன.

சந்தேக நபர்களுக்கிடையே ஏற்பட்ட கருத்துவேறுதான் இந்தச் சம்பவத்துக்குக் காரணம் என முதற்கட்ட விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளதாக அவர் ஓர் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். 

கடந்த கால விசாரணை அறிக்கைகளை றுஆய்வு செய்ததில் ஒரு சந்தேக நபருக்கு மூன்று குற்றவியல் மற்றும் போதைப்பொருள் வழக்குகள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. 

எவ்வாறாயினும், சிறுநீர் பரிசோதனையில் அனைத்து சந்தேக நபர்களும் போதைப்பொருளுக்கு எதிர்மறையாக இருப்பதாக ரவுப் தெரிவித்தார். 

சந்தேக நபர்கள் அனைவரும் ஒரு நாள் காவலில் வைக்கப்பட்ட நிலையில் குற்றவியல் சட்டம் பிரிவு 148 இன் படி இந்த வழக்கு விசாரிக்கப்பட்டது. 

முன்னதாக, பண்டார் பாரு பெர்மாஸ் ஜெயாவிலுள்ள ஓர் உணவகத்தின் முன் கருத்துவேறுபாடு காரணமாக ஐந்து ஆடவர்களிடையே சண்டை நிகழ்வதைக் காட்டும் 39 வினாடி வீடியோ வைரலானது.

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

+ - reset