நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

'Lemon Law" சட்டத்தை அரசாங்கம் பரிசீலித்து வருகின்றது : அர்மிசான் முஹம்மத் அலி

பெட்டாலிங் ஜெயா: 

'Lemon Law' சட்டத்தை ஏற்றுக் கொள்வதற்கான சாத்தியக்கூறுகளை மறுஆய்வு செய்யும் பணியில் அரசாங்கம் தற்போது கவனம் செலுத்தி வருவதாக உள்நாட்டு வாணிபம் மற்றும் வாழ்க்கை செலவீன அமைச்சர் அர்மிசான் முஹம்மத் அலி தெரிவித்துள்ளார். 

உள்ளூர் பயன்பாட்டிற்கு மாற்றியமைக்கும் முன் அனைத்துலக நடைமுறைகளை பகுப்பாய்வு செய்வது அவசியம் என்பதையும் அவர் மறுக்கவில்லை. 

குறைபாடுகளுள்ள வாகனங்களுக்கான உரிமையாளர் பாதுகாப்பு பிரச்சனையை மலேசியா தீவிரமாக கவனித்து வருவதாக அவர் குறிப்பிட்டார். 

குறிப்பிட்ட கால அவகாசத்திற்குள் தரம் மற்றும் செயல்திறன் அளவுகோல்களை பூர்த்தி செய்யத் தவறிய பழைய அல்லது புதிய வாகனங்களை வைத்திருக்கும் உரிமையாளர்கள் 'Lemon Law' சட்டத்தை அறிமுகப்படுத்த பினாங்கு பயனீட்டாளர் சங்கத்தின் அழைப்புகளுக்குப் பதிலளிக்கும் வகையில் அர்மிசான் இவ்வாறு கூறினார்.

அமெரிக்கா, சிங்கப்பூர், தென் கொரியா, சீனா மற்றும் பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகள்  'Lemon Law' சட்டத்தை அமல்படுத்தி வருகின்றன. 

2004-ஆம் ஆண்டில், சிங்கப்பூர் அதன் பயனீட்டாள பாதுகாப்பு சட்டத்தில் 'Lemon Law' சட்டத்தைச் சேர்த்தது.

இருப்பினும், மலேசியாவின் பயனீட்டாளர் பாதுகாப்புச் சட்டம் 1999 குறைபாடுள்ள ஆட்டோமொபைல்களிலிருந்து பயனீட்டாளரைப் பாதுகாக்கிறது என்று அர்மிசம் கூறினார். 

இந்தச் சட்டம் குறைபாடுள்ள வாகனங்கள் தொடர்பாக பயனீட்டாளரைப் பல வழிகளில் பாதுகாக்கிறது. மேலும், இது பழுதடைந்த வாகனங்களின் சிக்கல்களைத் தீர்க்கப் பயன்படுத்தக்கூடிய பல்வேறு விதிகளை வழங்குகிறது.

சமீபத்தில், புதிதாக வாங்கிய இரண்டு வாகனங்கள் பழுதடைந்ததாகச் சமூக ஊடகங்களில் செய்திகள் வெளியாகின.

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

+ - reset