நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் வணிகம்

By
|
பகிர்

உலகின் மதிப்பு மிக்க நிறுவனப் பட்டியலில் மைக்ரோசாப்ட் முதலிடம்

வாஷிங்டன் : 

உலகின் மதிப்பு மிக்க நிறுவனமாக மைக்ரோசாப்ட் நிறுவனம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

சத்ய நாதெல்லா தலைமை வகிக்கும் நிலையில், மைக்ரோசாப்ட் நிறுவனம் ஆப்பிள் நிறுவனத்தைப் பின்னுக்குத் தள்ளி சந்தையில் அதிக மதிப்பு மிக்க நிறுவனமாகத் திகழ்கிறது. 

தற்போதைய நிலவரப்படி மைக்ரோசாப்ட் சந்தை மதிப்பு 2.87 டிரில்லியன் டாலர்கள் ஆகும்.

முன்னதாக 2018 மற்றும் 2021 ஆண்டுகளில் மைக்ரோசாப்ட் நிறுவனம் இதே போன்று உலகின் மதிப்பு மிக்க நிறுவனம் என்ற நிலையை எட்டியது குறிப்பிடத்தக்கது.

அந்த வரிசையில், மைக்ரோசாப்ட் நிறுவனம் மீண்டும் இந்த அந்தஸ்த்தை பெற்றிருக்கிறது.

மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் கிளவுட் கம்ப்யூடிங் பிரிவான அஸ்யூர் அதிக வருவாய் ஈட்டிக் கொடுத்ததே அந்தஸ்த்தை அதிகரிக்க முக்கியக் காரணம் என கூறப்படுகிறது.

கிளவுட் கம்ப்யூடிங் பிரிவில் மைக்ரோசாப்ட் ஆதிக்கம் மேலும் அதிகரிக்கும் என்றும் இதன் சந்தை மதிப்பு மேலும் அதிகரிக்கவும் வாய்ப்புகள் அதிகம் இருப்பதாகவும் கூறப்படுகிறது.

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

+ - reset