நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

3 மாநிலங்களில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கையில் மாற்றம் இல்லை

கோலாலம்பூர்: 

இன்று காலை 6 மணி நிலவரப்படி, ஏழு தற்காலிக வெள்ள நிவாரண மையங்களில் (பிபிஎஸ்) தங்கியுள்ளவர்களின் எண்ணிக்கை 289 பேராகவுள்ளது. 

ஜொகூர், பகாங், சபா ஆகிய மூன்று மாநிலங்களில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையில் எந்த மாற்றமும் இல்லை. 

ஜொகூரில் மாநிலத்தில் மூன்று தற்காலிக வெள்ள நிவாரண மையங்கள் செயல்பாட்டில் உள்ளன.

சிகாமாட்டில் இரண்டு மற்றும் பத்து பஹாட்டிலுள்ள ஒரு தற்காலிக வெள்ள நிவாரண மையங்களில் 22 குடும்பங்களைச் சேர்ந்த 80 பேர் தங்கியுள்ளனர். 

பஹாங் மற்றும் சபாவில், 36 குடும்பங்களைச் சேர்ந்த மொத்தம் 110 பேர் ரோம்பினில் உள்ள இரண்டு தற்காலிக வெள்ள நிவாரண மையங்களில் தங்கியுள்ளனர். 

சபாவில், 42 குடும்பங்களைச் சேர்ந்த 99 பேர் பாதிக்கப்பட்ட பெலூரானிலுள்ள இரண்டு தற்காலிக வெள்ள நிவாரண மையங்கள் தங்க வைக்கப்பட்டுள்ளதாகத் தேசியப் பேரிடர் மேலாண்மை நிறுவனமான (நட்மா) தெரிவித்துள்ளது. 

மேலும், ஐந்து மாநிலங்களை உள்ளடக்கிய ஆறு ஆறுகள் ஆபத்தான நிலையில் இருப்பதாகக் கண்டறியப்பட்டது.

வெள்ளம், சேதமடைந்த பாலங்கள் மற்றும் நிலச்சரிவுகள் காரணமாக 17 சாலைகள் மூடப்பட்டுள்ளதாகவும் நட்மா தெரிவித்துள்ளது.

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

+ - reset