நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

kLIAவில் 6 கிலோ கிராம் போதைப் பொருள் கடத்தல் முயற்சியை சுங்கத்துறை முறியடித்தது

சிப்பாங்:

கேஎல்ஐஏவில்  6 கிலோ கிராமிற்கும் அதிகமான  போதைப் பொருள் கடத்தல் முயற்சியை சுங்கத்துறை முறியடித்தது.

இதனை சுங்கத்துறையின் அமலாக்க நடவடிக்கை பிரிவு இயக்குநர் வோங் பூன் சியான் கூறினார்.

கடந்த ஜனவரி 9ஆம் தேதி சிப்பாங் கேஎல்ஐஏ 1இல் பயணி ஒருவர் கையில் கொண்டு வந்த பெட்டியை அதிகாரிகள் சோதனையிட்டனர்.

சம்பந்தப்பட்ட பயணி பிரேசில் சாவ் பாலோவில் இருந்து விமானத்தில் வந்த பிரான்ஸ் நாட்டினர் ஆவார்.

சோப்பு போன்று தோற்றமளிக்கும் ஜெல் போன்ற பொருட்கள் அடங்கிய ஏழு அழகுசாதனப் பொருட்கள் அந்தப் பெட்டிகளுக்குள் இருந்து கண்டுபிடிக்கப்பட்டன. அவை அழகு சாதன் மருந்துகள் என்று அவர் கூறினார்

அதிகாரிகளை ஏமாற்றும் நோக்கில் பல்வேறு வண்ணங்களின் அழகு சாதனப் பெட்டிகளுக்குள் சோப்பு போன்ற மருந்துகளை மறைத்து வைப்பதே இந்த கடத்தல் முயற்சியின் திட்டமாகும்.

இந்நடவடிக்கையில் 6.13 கிலோ கிராம் எடைக் கொண்ட கொக்கேய்ன் வகை போதைப் பொருள் கைப்பற்றப்பட்டது.

இதன் மொத்த மதிப்பு 1.12 மில்லியன் ரிங்கிட்டாகும்.

சம்பந்தப்பட்ட ஆடவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் என்று வோங் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset