நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

நாட்டின் மேம்பாட்டிற்கு அனைத்து இனங்களின் பங்களிப்பும் அளப்பரியது: ரஃபிடா

கோலாலம்பூர்:

நாட்டின் மேம்பாட்டிற்கு அனைத்து இனங்களின் பங்பளிப்பும் அள்ப்பரியது என்று முன்னாள் அமைச்சர் டான்ஸ்ரீ ரஃபிடா அஜிஸ் கூறினார்.

மலேசியர்களை பூமிபுத்ரா அல்லது பூமிபுத்ரா அல்லாதவர்கள் என்ற மனநிலையிலிருந்து அனைவரும் விடுபட வேண்டும். 

பல்வேறு இன சமூகங்களின் சிறந்த மூளைகளைப் பயன்படுத்தி நாட்டின் முன்னோக்கி பாதையை வகுத்துச் செல்ல வேண்டும்.

இதுவே அனைவரின் எண்ணமாக இருக்க வேண்டும் என்று அவர் கூறினார்.

மலேசியா தொடர்ந்து பின்தங்கிய நிலையில் இருக்க முடியாது.

மலேசியர்கள்  தேவையற்ற சிந்தனை, கருத்துகளால் ஏற்படுத்தும் ஒரு முரண்பாடான சமூக, அரசியல் சூழலால் பின்னால் இழுக்கப்பட முடியாது.

சிலர் தங்கள் சொந்த காரணங்களுக்காக முரண்பாடுகளை விதைக்கும் போது நாம் எவ்வாறு நல்லிணக்கத்தை அடைய முடியும் என்று அவர் கேள்வி எழுப்பினார்.

பல்வேறு இனங்களைச் சேர்ந்த வல்லுநர்கள் எதிர்காலத்திற்கான சமூகப் பொருளாதார வளர்ச்சியில் முன்னோக்கி செல்லும் பாதையில், திறன், ஆற்றல், உயர் தகுதி ஆகியவற்றில் கவனம் செலுத்த வேண்டும் என்று அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset