நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

உணவகத்தில் எலிக் கழிவுகள்: ஜார்ஜ் டவுனில் 3 உணவகங்கள் மூடப்பட்டன

ஜார்ஜ் டவுன்:

எலி கழிவுகள் கண்டுபிடிக்கப்பட்டதை தொடர்ந்து ஜார்ஜ்டவுனின் 3 உணவகங்கள் மூடப்பட்டன.

பினாங்கு மாநில மாநகர் மன்றம் இந்த அதிரடி நடவடிக்கையை எடுத்தது.

கிட்டத்தட்ட 5 உணவகங்களில் அமலாக்க அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர்.

இதில் மூன்று உணவகங்கள் சுகாதாரமின்மையால் மூடப்பட்டன என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக சமையலுக்கு தேவையான மூலப் பெருட்கள் வைக்கும் இடங்களில் எலியின் கழிவுகள் கண்டுபிடிக்கப்பட்டது.

மேலும் அவ்விடம் எலியின் சிறுநீர் நாற்றமும் அடித்துள்ளது. 

இதன் அடிப்படையில் சம்பந்தப்பட்ட உணவகங்கள் அடுத்த 14 நாட்களுக்கு மூடப்படும் என்று எச்சரிக்கை நோட்டிஸ் ஒட்டப்பட்டு மூடப்பட்டன. 

அடுத்த 14 நாட்களுக்குள் அந்தக் குறிப்பிட்ட உணவகங்கள் சுத்தம் செய்யப்பட்டு தரமான முறையில் சமையல் பொருட்கள் வைக்கும் இடம் சுத்தமாகவும் சமைக்கும் இடம் சுகாதார வரம்புகளோடு இருக்க வேண்டும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.

உணவக வளாகத்தில் அதன் உரிமையாளர்களும் பணியாளர்களும்  தூய்மையில் தீவிர கவனம் செலுத்துமாறு பினாங்கு மாநகர் மன்றம் கேட்டுக் கொண்டுள்ளது.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset