நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

பசுமையான தைபூசத்தை கொண்டாடுவோம்: பள்ளி மாணவர்கள் வேண்டுகோள்

பினாங்கு:

இம்மாதம் கொண்டாடப்படவிருக்கும் தைப்பூசத்தை பசுமையானதாகவும், சுற்றுச்சூழலை பாதிக்காத குப்பைகள் அற்ற சமய திருவிழாக கொண்டாடுவோம் என பினாங்கு மாநிலத்தின் இந்து சமய மாணவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

பினாங்கு மாநில இந்து சங்க பேரவையின் தலைவர் விவேக ரத்னா ஏ. தர்மன் தலைமையில் நடைபெறும் மைமாணவர் நிகழ்ச்சியில் இந்த மாணவர்கள் தங்களுடைய வேண்டுகோளை விடுத்தனர்.

இம்மாதம் கொண்டாடப்படவிருக்கும்  தைப்பூசத்தன்று நெகிழிகளை பயன்படுத்துவதை முழுமையாக தவிர்க்க வேண்டும் எனவும் இந்த மாணவர்கள் கேட்டுக்கொண்டதாக இந்த பசுமையான தைப்பூசத்தை எவ்வாறு கொண்டாட வேண்டும் என்ற பயிலரங்கை நடத்திய பினாங்கு பயனீட்டாளர் சங்கத்தின் சுற்றுச்சூழல் கல்வி அதிகாரி என்.வி.சுப்பாராவ் தெரிவித்தார்.

மக்காத நெகிழிகள் தட்டுக்கள், குப்பிகள், நெகிழி தண்ணீர் பாட்டில்கள் அனைத்தும் சுற்றுச்சூழலுக்கு ஆபத்தானவை என சுப்பாராவ் மாணவர்களுக்கு எடுத்துரைத்தார்.

வீட்டிலுள்ள மற்ற குடும்ப உறுப்பினர்களுக்கு நெகிழியின் பேராபத்தை தாங்கள் சொல்லப்போவதாக மாணவர்கள் தெரிவித்தனர்.

மேலும் தாங்கள் தைப்பூசத்தின் போது உணவை விரயம் செய்யப்போவதில்லை என உறுதிமொழி எடுத்துக்கொண்டதாக சுப்பாராவ் தெரிவித்தார்.

தைப்பூசத்தின் போது ஒவ்வொருவரும், தூய்மையைக் கடைப்பிடிக்க வேண்டும்.

நெகிழி பயன்பாட்டை தவிர்க்க வேண்டும். பசுமையான தைப்பூசத்தை கொண்டாடும்படி பக்தர்களுக்கு சுப்பாராவ் வேண்டுகோள் விடுத்தார்.

- ஃபிதா

தொடர்புடைய செய்திகள்

+ - reset