நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

அந்நிய தொழிலாளர்களுக்கான விண்ணப்ப நடைமுறை காலம் 15 மாதம், 23 நாட்களாக குறைக்கப்பட்டது: சைபுடின் நசுதியோன்

புத்ராஜெயா:

அந்நிய தொழிலாளர்களுக்கான விண்ணப்ப நடைமுறை காலம் 15 மாதம், 23 நாட்களாக குறைக்கப்பட்டுள்ளது.

உள்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ சைபுடின் நசுதியோன் இதனை உறுதிப்படுத்தினார்.

அந்நிய தொழிலாளர்களுக்கான உள்துறை அமைச்சு, மனிதவள அமைச்சு ஆகியவற்றுடனான சந்திப்புக் கூட்டத்தில் பல முடிவுகள் எடுக்கப்பட்டது.

குறிப்பாக கடந்த காலங்களில் அந்நிய தொழிலாளர்களை நாட்டிற்குள் கொண்டு வருவதற்கான விண்ணப்ப நடைமுறை காலம் 29 மாதங்கள், 13 நாட்களாக இருந்தது.

தற்போது அது 15 மாதங்கள் 23 நாட்களாக குறைக்கப்பட்டுள்ளது.

இந்த காலக்கெடு குறைக்கப்பட்டதில் இருந்து முன்னேற்றத்திற்கு உதாரணமாக, லெவி செலுத்தும் காலத்தை 30 நாட்களில் இருந்து 15 நாட்களாக குறைக்கலாம்.

 லெவி செலுத்துவதற்கான காலக்கெடு தற்போது 30 நாட்களாக உள்ளது. ஆனால் தரவுகளை ஆய்வு செய்யும் போது, ​​கிட்டத்தட்ட 77 சதவீத முதலாளிகள் 15 நாட்களுக்குள் பணம் செலுத்துகின்றனர்.

அப்படியென்றால் நமக்கு ஏன் 30 நாட்கள் தேவை. எனவே அதை 15 நாட்களாக சுருக்கிக் கொள்கிறோம்.

அந்நிய தொழிலாளர்களின் நுழைவு செயல்முறை ஒப்புதல், ஒதுக்கீட்டு விண்ணப்பம், ஏஜென்சி நேர்காணல், நாட்டின் நுழைவாயிலுக்கு வரும் வரை பல நிலைகளைக் கடந்து செல்லும் என்றார் அவர்.

தற்போது வங்காளதேசம், இந்தோனேசியா, நேப்பாளம் ஆகிய நாடுகளில் இருந்து தான் அதிகமாக தொழிலாளர்கள் மலேசியாவுக்கு வருகின்றனர்.

அதே  நேரத்தில்  தாய்லாந்து, கம்போடியா, இந்தியா, பிலிப்பைன்ஸ், மியன்மார் ஆகிய நாடுகளில் இருந்தும் தொழிலாளர்கள் வருகின்றனர்.

மலேசியாவில் தற்போது சேவை, உற்பத்தி, கட்டுமானத் துறைகளில் தொழிலாளர்களின் தேவை போதுமானதாக  உள்ளது.

ஆனால் தோட்டத் துறையில் பற்றாக்குறையும் அதிக தேவையும் உள்ளது என்று அமைச்சர் சைபுடின் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset