நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

டிங்கியை ஒழிக்கும் நடவடிக்கையாக 36,426 அபராதங்கள் விதிக்கப்பட்டுள்ளன

கோலாலம்பூர் -

டிங்கியை ஒழிக்கும் நடவடிக்கையாக 36,426 அபராதங்கள் விதிக்கப்பட்டு உள்ளன.

இந்த அபராதங்களின் மொத்த மதிப்பு 18 மில்லியன் ரிங்கிட் என்று சுகாதார இயக்குநர் டாக்டர் ராட்ஸி அபு ஹசான் கூறினார்.

நாட்டில் டிங்கி காய்ச்சலை கட்டுப்படுத்த வேண்டும் என்ற நோக்கில் அரசாங்கம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

குறிப்பாக 1975 அமலாக்க சட்டத்தின் கீழ் பல நடவடிக்கைகளை எடுக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக கடந்தாண்டு 18 மில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள 36,426 சம்மன்கள் விதிக்கப்பட்டுள்ளன.

கிட்டத்தட்ட 4,264 விவகாரங்கள் நீதிமன்றம் வரை கொண்டு செல்லப்பட்டது. இதில் 911 வழக்குகள் தண்டனைகள் வழங்கப்பட்டுள்ளது.

இதன் வாயிலாக 2,349,950 ரிங்கிட் அபராதம் செலுத்தப்பட்டதாக அவர் கூறினார்.

கடந்த டிசம்பர் மாதம் மட்டும் 1.2 மில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள 2,470 அபராதங்கள் விதிக்கப்பட்டுள்ளன என்றும் அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset