நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

துன் மகாதீருக்கு எதிராக பாஸ் முஸ்லிம் அல்லாதவர்கள் பிரிவு போலீசில் புகார்

கோலாலம்பூர்:

உலு லங்காட் பாஸ் கட்சியின் முஸ்லிம் அல்லாத பிரிவு முன்னாள் பிரதமர் துன்  மகாதீர் முகமத் மீது போலீசில் புகார்  செய்யவுள்ளது.

இந்திய தொலைக்கட்சிக்கு பேட்டியளித்த துன் மகாதீர் இந்திய சமுதாயத்தின் விசுவாசத்தை பற்றி கேள்வி எழுப்பியுள்ளார்.

மகாதிரின் கருத்துக்கள் பாரபட்சமானது. மேலும் இஸ்லாத்திற்கு விரோதமானது என்று நாங்கள் நம்புகிறோம்.

இதன் அடிப்படையில் நாளை துன் மகாதீருக்கு எதிராக போலீஸ் புகார் செய்யப்படவுள்ளது என்று அப் பிரிவில் இளைஞரணி தலைவர் பி. பூபாலன் கூறினார்.

முன்னாதாக துன் மகாதீரின் இக்கருத்துக்கு அமைச்சர்கள், அரசியல் தலைவர்கள்,   முன்னாள் அமைச்சர் உட்பட பல்வேறு தரப்பிலிருந்தும் கடுமையான கண்டனங்கள் எழுந்துள்ளது.

குறிப்பாக பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமும் மகாதீரை கடுமையாக சாடினார்.

இதுபோன்ற காலாவதியான கருத்துக்கள் நாட்டை அழித்துவிடும் என்று கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset