நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

குடிநீர் பிரச்சினையில் போர்க்கால நடவடிக்கை எடுத்த பினாங்கு அரசுக்கு நன்றி: பெலித்தா நசீர்

பினாங்கு:                                                                

பினாங்கில் சுமார் 50 ஆண்டுகால குடி நீர்க் குழாய் பழுது நீக்கும் பிரச்சனைகளில் பினாங்குவாசிகளுக்கு நீர் விநியோகத்தை மீண்டும் வெற்றிகரமாக திரும்பப் பெறச் செய்த மாநில முதல்வர், PBA, MBPP, தொடர்புடைய துறைகளுக்கு நன்றி தெரிவித்துக் கொள்வதாக பெலித்தா சங்கத் தலைவர் முஹம்மது நசீர் மொஹிதீன் கூறினார். 

மேலும், பினாங்குவாசிகளுக்கு சேவை செய்ய மாநில அரசு, தொடர்புடைய துறையால் உடனடி நடவடிக்கை எடுக்கப்பட்டு, தீர்க்கப்பட்டது பாராட்ட வேண்டும் என்றார் அவர். 

மக்களின் அத்தியாவாசிய பிரச்சினையாக நிலவிய நீர் வினியோகத் தடையை அரசு மிகக் கவனமுடன் கையாண்டது. மக்களின் சிரமத்தைத் தவிர்க்க மத்திய அரசும் மாநில அரசின் நிர்வாகமும் பழுது நீக்க வாக்குறுதி அளித்த 4 நாள் ஆகும் என்று கூறி 2 நாட்களில் நிறைவேற்றியுள்ளது. 

பொது நலனுக்காக எடுக்கப்பட்ட தேவையான முன்முயற்சிகளுக்கு பினாங்கு மாநில அரசுக்கு பினாங்கு மக்கள் சார்பாக நன்றி தெரிவித்துக் கொள்வதாக
பெலித்தா சங்கத்தின் சார்பிலும் பினாங்கு சௌரஸ்தரா பஜார் வர்த்தகர்கள் சங்கத்தின் சார்பாகவும், டத்தோ பண்டார், MBPP, உரிமம் வழங்கும் பிரிவின் செயல் தலைவர், MBPP ஊழியர்கள் அனைவருக்கும் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்வதாக முஹம்மது நசீர் மொஹிதீன் கூறினார்.

வணிகர்களின் பயன்பாட்டுக்கான நீர் விநியோகத் தொட்டியை வழங்க அழைப்பு விடுத்தவுடன் விரைவான நடவடிக்கையை மேற்கொண்ட MBPP கவுன்சிலர் தெஹ் லாய் ஹெங்கிற்கும் பெரிய குழாய் பழுதுகள் நீக்க பாடுபட்ட ஊழியர்களுக்கும் "PELITA" சங்கத்தின் சார்பாக, நன்றிகள் என்று அவர் கூறினார்.

- ஃபிதா

தொடர்புடைய செய்திகள்

+ - reset