நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

தைப்பூசத்தை முன்னிட்டு பத்துமலைக்கு இலவச ரயில், பேருந்து சேவைகள: அந்தோனி லோக்

பத்துமலை:

தைப்பூச விழாவை முன்னிட்டு பத்துமலைக்கு இலவச ரயில், பேருந்து சேவைகள் வழங்கப்படவுள்ளது.

போக்குவரத்துத் துறை அமைச்சர் அந்தோனி லோக் இதனை அறிவித்தார்.

தைப்பூச விழாவை முன்னிட்டு ஒவ்வொரு ஆண்டும் லட்சக்கணக்கான பக்தர்கள் பத்துமலைக்கு வருவார்கள்.

அவர்களின் வசதிக்காக அரசாங்கம் பல சலுகைகளை வழங்கவுள்ளது.

குறிப்பாக ஜனவரி 23ஆம் தேதி தொடங்கி 4 நாட்கள் 3 இரவுகளுக்கு கூடுதல் கேடிஎம் ரயில் சேவையை வழங்குகிறது.

அதே வேளையில் ஜனவரி 24, 25ஆம் தேதி  இரு நாட்களுக்கு இலவச கேடிஎகேடிஎம் ரயில், பேருந்து சேவைகள் இலவசமாக வழங்கப்படவுள்ளது.

நாட்டின் அனைத்து பகுதிகளில் இருந்து கேடிஎம் ரயில் வாயிலாக இலவசமாக பத்துமலைக்கு வரலாம்.

அதே வேளையில் பத்துமலை, பினாங்கில் இலவச பேருந்து சேவை வழங்கப்படவுள்ளது.

பிரசரனா நிறுவனத்தின் வாயிலாக இரு தினங்களுக்கு இந்த இலவச பேருந்து சேவை வழங்கப்படவுள்ளது.

இதை தவிர்த்து கூடுதல் இடிஎஸ் ரயில் சேவை உட்பட பல சலுகைகளை அரசாங்கம் வழங்குகிறது.

இந்த வாய்ப்புகளை பயன்படுத்தி பக்தர்கள் பாதுபாப்பாக பத்துமலைக்கு வந்து செல்லலாம் என்று அந்தோனி லோக் கூறினார்.

பத்துமலையில் மின்படித் திட்டம் குறித்து ஸ்ரீ மகா மாரியம்மன் தேவஸ்தானத்தின் தலைவர் டான்ஸ்ரீ நடராஜா பந்துரைகளை முன்வைத்தார்.

அவரின் பரிந்துரைகள் ஆய்வுக்குப் உட்பட்டு உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று அந்தோனி லோக் கூறினார்.

-   பார்த்திபன் நாகராஜன் 

தொடர்புடைய செய்திகள்

+ - reset