நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

அரசியலில் இல்லாவிட்டால் 50 மில்லியன் ரிங்கிட் சொத்துகளுக்கு அதிபராகியிருப்பேன்: டாய்ம்

கோலாலம்பூர்:

அரசியலில் இல்லாமல் முழு நேரம் வர்த்தகத்தில் இருந்திருந்தால் 50 மில்லியன் ரிங்கிட் சொத்துகளுக்கு அதிபராகியிருப்பேன்.

முன்னாள் நிதியமைச்சர் துன் டாய்ம் ஜைனூடின் இதனை தெரிவித்தார்.

ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பில் எம்ஏசிசி என்னையும் என் குடும்பத்தையும் வளைத்துள்ளது.

எம்ஏசிசி விசாரணை குறித்து என் குடும்ப உறுப்பினர்கள் நீதித்துறை மறுஆய்வுக்கு விண்ணப்பித்துள்ளனர்.

இந்நிலையில் அரசியலுக்கு வருவதற்கு முன்பு நான் மிகப் பெரிய வர்த்தகராக இருந்தேன்.

குறிப்பாக ஓர் வங்கியை உரிமையாக கொண்டிருந்தேன். பல முன்னணி நிறுவனங்கள் இதில் முதலீடு செய்திருந்தன.

1984ஆம் ஆண்டு நிதியமைச்சராக நியமிக்கப்பட்ட பின் தனது முதலீடுகள் அனைத்தையும் அறக்கட்டளைக்கு மாற்ற ஒப்புக் கொண்டேன்.

ஆக ஒருவேளை அரசியலுக்கு வரவில்லை என்ற அதிகமாக சொத்துகளை கொண்ட தொழில் அதிபராக இருந்திருப்பேன் என்று அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset