நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

துபாய் நகர்வு திட்டம்: நால்வரிடம் காவல்துறை வாக்குமூலம் பதிவு 

பெட்டாலிங் ஜெயா: 

அன்வார் இப்ராஹிம் தலைமையிலான ஒற்றுமை அரசாங்கத்தைக் கவிழ்க்கும் நோக்கத்தில் செயல்படும் துபாய் நகர்வு திட்டம் குறித்து நான்கு பேரிடம் காவல்துறையினர் வாக்குமூலம் பதிவு செய்துள்ளனர்.

பெர்சத்து கட்சியைச் சேர்ந்த பட்ருல் ஹிஷாம், ஆர்வலர் வான் முஹம்மது அஸ்ரி வான் டெரிஸ், எழுத்தாளர் சலீம் இஸ்கந்தர் மற்றும் சமூக தொடர்புத் துறையின் துணை இயக்குநர் ஜெனரல் (ஜே-கோம்) இஸ்மாயில் யூசோப் ஆகிய நால்வரிடம் காவல்துறையினர் வாக்குமூலம் பதிவு செய்துள்ளனர். 

இதனைப் புக்கிட் அமான் குற்றப் புலனாய்வுத் துறை இயக்குநர் முகமது ஷுஹைலி முகமது ஜெய்ன் உறுதிப்படுத்தினார். 

துபாய் நகர்வு திட்டம் குறித்து தமது தரப்புக்கு இதுவரை மொத்தம் 145 புகார்கள் கிடைத்துள்ளன என்று அவர் தெரிவித்துள்ளார். 

நாடு முழுவதும் கிடைக்கப்பெறும் புகார்களைத் தொடர்ந்து சில அரசியல் கட்சித் தலைவர்களும் விசாரணைக்கு அழைக்கப்படுவார்கள் என்று தேசிய காவல்துறை தலைவர் இதற்கு முன் குறிப்பிட்டார். 

தகவல் தொடர்பு மற்றும் மல்டிமீடியா சட்டம் 1998 இன் பிரிவு 233 மற்றும் குற்றவியல் சட்டத்தின் பிரிவு 505 (பி) ஆகியவற்றின் கீழ் இந்த வழக்கு விசாரிக்கப்பட்டது என்றார்.

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

+ - reset