நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

இந்திய முஸ்லிம் உணவகங்களை இழிவுப்படுத்தி அவதூறு; சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்: பிரெஸ்மா

கோலாலம்பூர்:

இந்திய முஸ்லிம் உணவகங்களை இழிவுப்படுத்தி டிக் டாக்கில் அவதூறாக பேசியவருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

பிரெஸ்மாவின் தலைவர் டத்தோ ஹாஜி ஜவஹர் அலி இதனை தெரிவித்தார்.

நாட்டில் உணவகம் தொடர்பில் எந்த சர்ச்சைகள் எழுந்தாலும் அதை மாமாக் உணவகம் என பல இழிவுபடுத்துகின்றனர்.

இந்த மாமாக் உணவகம் என்ற பெயரை பயன்படுத்தி சர்ச்சைகளை ஏற்படுத்த வேண்டாம் என பிரெஸ்மா பல முறை கண்டனத்தை தெரிவித்துள்ளது.

தற்போது டிக் டாக்கில் ஒரு மலாய் பெண் இந்திய முஸ்லிம் உணவுகள் எதிராக கடுமையான அவதூறுகளை பரப்பி உள்ளார்.

ஆண்களின் உள்ளாடையை போட்டு பிரியாணி சமைக்கிறார்கள் உட்பட பல குற்றச்சாட்டுகளை அவர் முன்வைத்துள்ளார்.

இந்த குற்றச்சாட்டுகள் எல்லாம் அடிப்படையற்றது. இதில் எந்த உண்மையும் இல்லை.

இக்குற்றச்சாட்டுகள் உண்மை என்றால் அதை அப்பெண் உடனடியாக நிரூப்பிக்க  வேண்டும்.

அதை சந்திக்க நாங்கள் தயாராக உள்ளோம். அதை விடுத்து பொய்யான தகவலை அப்பெண் பரப்பக் கூடாது.

சம்பந்தப்பட்ட பெண் மீது பிரெஸ்மா போலீஸ் புகாபுகார் செய்துள்ளது. நாடு தழுவிய நிலையில் இப்புகார்கள் செய்யப்படும்.

அதே வேளையில் சம்பந்தப்பட்ட பெண் மீது வழக்கு தொடர்வது குறித்து பிரெஸ்மா வழக்கறிஞருடன் விவாதித்து வருகிறது.

அவர் மீது வழக்கு தொடரப்பட்டு நஷ்டஈடும் கோரப்படும். சம்பந்தப்பட்ட பெண் வீடியோவை நீக்கினாலும் வழக்கை நாங்கள் விட மாட்டோம்.

சம்பந்தப்பட்ட பெண் மீதான நடவடிக்கை மற்றவர்களுக்கு ஒரு பாடமாக இருக்க வேண்டும் என்று டத்தோ ஜவஹர் அலி கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன் 

தொடர்புடைய செய்திகள்

+ - reset