நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

உலகின் சக்திவாய்ந்த கடப்பிதழ் பட்டியலில் மலேசியாவிற்கு 12-ஆவது இடம்

பெட்டாலிங் ஜெயா: 

உலகின் சக்திவாய்ந்த கடப்பிதழ் பட்டியலில் மலேசியா 12-ஆவது இடத்திலுள்ளது. 

உலகக் கடப்பிதழ் தரவரிசையில் சிறந்த மதிப்பெண்களைப் பதிவு செய்த போதிலும் கடந்த ஆண்டின் நடுப்பகுதியுடன் ஒப்பிடும்போது மலேசியாவின் கடப்பிதழ் சக்தி ஒரு ரேங்க் வீழ்ச்சியடைந்துள்ளது.

ஒரு குறிப்பிட்ட கடப்பிதழ் வைத்திருப்பவர் வருகைக்கு முன் விசா தேவையில்லாமல் நுழையக் கூடிய இடங்களின் எண்ணிக்கையை அடிப்படையாகக் கொண்டது. 

இதன் பொருள் மலேசியர்கள் உலகெங்கிலும் உள்ள 227 பயண இடங்களில் 182 இடங்களுக்கு விசா இல்லாத அணுகலைப் பெற்றுள்ளனர்.

சமீபத்தில் நடைபெற்ற ஹென்லி பாஸ்போர்ட் குறியீட்டின்படி, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான், சிங்கப்பூர் மற்றும் ஸ்பெயின் ஆகிய 6 நாடுகள் உலகளாவிய 194 நாடுகளுக்கு விசா இல்லாமல் செல்ல அனுமதிக்கின்றன. 

இதனால், 2024-ஆம் ஆண்டின் தொடக்கத்தில் இந்த 6 நாடுகளும் உலகின் சக்திவாய்ந்த கடப்பிதழ் கொண்ட நாடுகளில் முதல் இடத்தை பிடித்துள்ளது.

சர்வதேச விமான போக்குவரத்து சங்கத்தின் (IATA) தரவுகளின் அடிப்படையில் தரவரிசைப்படுத்தப்பட்டுள்ளது.

கடந்த ஐந்தாண்டுகளாக ஜப்பானும் சிங்கப்பூரும் தொடர்ந்து முதல் இடத்தில் ஆதிக்கம் செலுத்தி வருகின்றன. இருப்பினும், இந்த காலாண்டின் தரவரிசை ஐரோப்பிய நாடுகள் முன்னேறி வருவதை காட்டுகிறது.

பின்லாந்து மற்றும் ஸ்வீடன் தென் கொரியாவுடன் இணைந்து இரண்டாவது இடத்தில் உள்ளன.

இந்த நாடுகள், 193 இடங்களுக்கு விசா இல்லாமல் செல்வதற்கான அனுமதியை வழங்குகின்றன.

சுமார் 35 நாடுகள் மலேசியாவை விட உயர்ந்த இடத்தைப் பெற்றுள்ளன.

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

+ - reset