நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

இரண்டு நிபந்தனைகளுக்குக் கட்டுப்பட்டால், மைஏர்லைன் நிறுவனத்தோடு பேச்சு வார்த்தை நடத்தப்படும்: அந்தோனி லோக் 

புத்ராஜெயா:

மத்தியக் கிழக்கு நாடுகளைச் சேர்ந்தவர்கள் மைஏர்லைன்ஸ் நிறுவனத்தில் முதலீடு செய்யவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 

கடந்த மாத இறுதியில் விற்பனை, கொள்முதல் ஒப்பந்தத்தில் (SPA)கையெழுத்திட்டதாகக் கூறப்படும் மைஏர்லைன் நிறுவனத்தைப் போக்குவரத்து அமைச்சர்பந்தோனி லோக் சந்திக்கவுள்ளார்.

அவர்கள் செயல்பாடுகளை மீண்டும் தொடங்க விரும்பினால் அதற்கு சில நிபந்தனைகள் விதிக்கப்படும் என்றார்.  

அவர்கள் அனைப்த்து பயணிகளுக்கும் திருப்பிச் செலுத்தப்படுவதை உறுதிசெய்து கொள்ள வேண்டும்.

மேலும் அவர்கள் தங்கள் ஊழியர்களுக்கு செலுத்த வேண்டிய தொகையைச் செலுத்த வேண்டும்.

இந்த இரண்டு நிபந்தனைகளையும் அவர்களால் நிறைவேற்ற முடிந்தால், அவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தப்படலாம் என்றும் அவர் திட்டவட்டமாகக் கூறினார். 

மைஏர்லைன்ஸ் கடுமையான நிதி சவால்களை மேற்கோள் காட்டி கடந்த ஆண்டு அக்டோபர் 12 ஆம் தேதி திடீரென தனது செயல்பாடுகளை நிறுத்தியது.

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

+ - reset