நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

நம்பிக்கையில்லா தீர்மானத்தை தாக்கல் செய்ய நினைக்கும் எதிர்க்கட்சியின் நடவடிக்கையை அன்வார்  எளிதாக்குகிறார் : ஃபாஹ்மி பட்சில்

பெட்டாலிங் ஜெயா:

பிரதமர் அன்வார் இப்ராஹிமிற்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானத்தைத் தாக்கல் செய்வதை முன் வைக்கப்படுவதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை என்ற எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினரின் கூற்றை ஒற்றுமை அரசாங்கத்தின் செய்தித் தொடர்பாளர் ஃபாஹ்மி ஃபட்சில் நிராகரித்துள்ளார்.

கடந்த ஆண்டு இரண்டு முறை தனக்கு எதிராக ஒரு நம்பிக்கையில்லா தீர்மானத்தைத் தாக்கல் செய்ய எதிர்க்கட்சிகளை அன்வார் அழைத்ததாகவும் அப்போது தேசியக் கூட்டணி அவ்வாறு செய்யவில்லை என்றும் ஃபாஹ்மி சுட்டிக்காட்டினார்.

ஒருவேளை பாசிர் மாஸ் நாடாளுமன்ற உறுப்பினர் அஹ்மத் ஃபட்லி ஷாரி இதை மறந்து பேசிகிறார் என்று ஃபாஹ்மி தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். 

நேற்று, அன்வார் தனக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானத்தை இன்னும் தாக்கல் செய்யவில்லை என்று கூறினார்.

 நம்பிக்கையில்லா தீர்மானத்தை இன்னும் தாக்கல் செய்யாமல் இருப்பது எதிர்க்கட்சிகளுக்கு ஆதரவு இல்லாததே காரணம் என்றார்.

மேலும், மக்களவை சபாநாயகர் ஜோஹாரி அப்துல் நம்பிக்கையில்லா தீர்மானத்தைத் தாக்கல் செய்ய அனுமதிப்பார் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை என்று ஃபாஹ்மி தெரிவித்தார். 

கடந்த காலத்தில் தேசியக் கூட்டணி நாடாளுமன்ற உறுப்பினர்கள தாக்கல் செய்த நம்பிக்கையில்லா தீர்மானத்தை ஜோஹாரி நிராகரித்ததை இப்போது ஃபாஹ்மி மேற்கோள் காட்டினார்.

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

+ - reset