நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

குறிப்பிட்ட நபர்களை மட்டும் எம்ஏசிசி குறிவைக்கிறது என  நினைக்க வேண்டாம்: பிரதமர்

கோலாலம்பூர்:

நாட்டில் குறிப்பிட்ட நபர்களை மட்டும் எம்ஏசிசி குறிவைக்கிறது என யாரும் நினைத்துக் கொள்ள வேண்டும்.

பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இதனை வலியுறுத்தினார்.

நாட்டில் ஊழலை ஒழிப்பது தான் ஒற்றுமை அரசாங்கத்தின் இலக்காக உள்ளது. இதன் அடிப்படையில்தான் பல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகிறது.

தற்போது எம்ஏசிசி பலரிடம் விசாரணைகள மேற்கொண்டு வருகிறது.

குறிப்பாக எம்ஏசிசி முன்னாள் தலைவர்களை மட்டும் குறிவைக்கவில்லை.

ஆனால், அந்தஸ்து, பதவியைப் பொருட்படுத்தாமல் ஊழலை எதிர்த்துப் போராடுவதற்கான ஆணையை மட்டுமே எம்ஏசிசி  செயல்படுத்துகிறது.

விசாரணைக்கு அழைக்கப்படுபவர்கள் குற்றவாளி இல்லை என்றால் யாரும் கவலைப்படத் தேவையில்லை.

ஏனென்றால் விசாரணை கவனமாக நடத்தப்படுகிறது. வலுவான ஆதாரங்கள் இருந்தால் வழக்குத் தொடரப்படும்.

இதில் எவ்வளவு பெரிய சுறாக்களாக இருந்தாலும் விசாரணைகளில் இருந்து தப்பிக்க முடியாது என்று பிரதமர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset