நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

அரசாங்கத்தை கவிழ்க்கும் முயற்சி ஜனநாயகத்திற்கு எதிரானது: ரபிடா

கோலாலம்பூர்:

அரசாங்கத்தை கவிழ்க்கும் முயற்சி ஜனநாயகத்திற்கு எதிரானது என்று முன்னாள் அமைச்சர் ரபிடா அஜிஸ் கூறினார்.

சமீபகாலமாக, லங்கா துபாய் என்று சொல்லப்படும் அரசை கவிழ்க்கும் திட்டங்கள், அரசியல் கட்சிகள் மத்தியில் பேரம் பேசுவது பற்றி அதிகம் பேசப்படுகிறது.

இதுபோன்ற நடவடிக்கைகள் நாட்டின் ஜனநாயகத்திற்கு எதிரானது.

மிக முக்கியமான விஷயம் என்னவென்றால் நாட்டின், மக்களின் நலன் என்பதை நினைவில் கொள்வது அவசியம்.

இதை கருத்தில் கொள்பவர்கள் இதுபோன்ற நடவடிக்கைகள் ஈடுப்பட மாட்டார்கள்.

மேலும் தற்போதுள்ள அரசாங்கத்தை கவிழ்க்க எந்த முயற்சியும் உறுதியற்ற அரசியல் தன்மைக்கான செய்முறையாகும்.

நிலைத் தன்மையில்லாத அரசியலால் முதலீடாளர்கள் மலேசியாவில் முதலீடு செய்வதில் ஆர்வம் காட்ட மாட்டார்கள். இது நாட்டிற்கும் மக்களுக்கும் தான் பாதிப்பு.

தற்போதைய அரசாங்கம் அதன் பதவிக் காலம் முடியும் வரை பணியாற்ற அனுமதிக்க வேண்டும். இது தான் சிறந்த ஜனநாயகம் என்று ரபிடா கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset