நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் வணிகம்

By
|
பகிர்

இன்னும் இரு மாதங்களுக்குள் வெங்காயத்தின் விலை சீராகும்: மைடின் உரிமையாளர்

பெட்டாலிங் ஜெயா: 

வெங்காயத்தின் விலை, அதன் இருப்பு இன்னும் இரண்டு மாதங்களில் சீராகும் என்று மைடின் அங்காடி கடையின் உரிமையாளர் அமீர் அலி மைடின் தெரிவித்துள்ளார்.

கடந்த மாதம் முதல் மார்ச் மாதம் வரை இந்தியா வெங்காய ஏற்றுமதியை நிறுத்தியது. 

நுகர்வோர் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்தவும் உள்நாட்டில் விநியோகத்தை அதிகரிக்கவும் இந்தியா இந்நடவடிக்கையை மேற்கொண்டது. 

இதனால், மலேசியா வெங்காயத்தை சீனா, பாகிஸ்தானிடம் இறக்குமதி செய்தது. 

இந்தியாவில் தற்போது வெங்காயம் அதிகளவில் இருப்பு இருப்பதால் விரைவில் ஏற்றுமதி தடையை இந்தியா நீக்கும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார். 

இதன் மூலம் வெங்காயத்தின் விலை சந்தையில் சற்று குறையும் என்று அவர் கூறினார். 

பிற நாடுகளிலிருந்து வெங்காயத்தை இறக்குமதி செய்தாலும். வெங்காயத் தட்டுப்பாடு இருக்கும் காரணத்தால் அதன் விலை அதிகமாக உள்ளது. 

சீனவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் வெங்காயத்தின் விலை ஒரு கிலோகிராம் RM1.99 லிருந்து RM4.99 ஆக உயர்ந்துள்ளதை அவர் எடுத்துக் காட்டினார். 

மேலும், பாகிஸ்தானிலிருந்து கிடைக்கும் அதே தரமான வெங்காயம் இப்போது ஒரு கிலோ ரிங்கிட் 6.99க்கு விற்கப்படுகிறது.

கடந்தாண்டு டிசம்பர் மாதம், விவசாயம் மற்றும் உணவு பாதுகாப்பு அமைச்சர் முகமது சாபு, வெங்காயத்தின் விநியோகத்தை அதிகரிக்கவும், வெங்காயத்தின் சில்லறை விலையில் குறிப்பிடத்தக்க மாற்றங்களைத் தடுக்கவும் சீனா மற்றும் பாகிஸ்தானில் இருந்து வெங்காயத்தை அரசாங்கம் பெறுகிறது என்றார்.

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

+ - reset