நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

லாவோஸில் கைதான போதைப் பொருள் மன்னனுக்கு மலேசியாவில் 530 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான சொத்துகள்

பேங்காக்:

லாவோஸில் கைது செய்யப்பட்ட 41 வயதான மலேசிய போதைப்பொருள் மன்னனை தாய்லாந்திற்கு நாடு கடத்த மலேசிய அதிகாரிகள் கோரவில்லை.

அவருக்கு எதிராக கைது ஆணை எதுவும் இல்லாததால் அவர் மலேசியாவுக்கு நாடு கடத்தப்பட மாட்டார்.

இருப்பினும், மலேசியாவில் உள்ள சுமார் 530 மில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள அவரது சொத்துக்களை பறிமுதல் செய்ய வழிவகுத்த தகவல்களை சேகரிக்க மலேசிய போலீசார் பேங்காக்கில் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதை போதைப்பொருள் கட்டுப்பாட்டு வாரியத்தின் பொதுச் செயலாளர் லெப்டினன்ட் ஜெனரல் ஃபானுரத் லுக்பூன் கூறினார். 

பேரா, பாரித் புந்தாரைச் சேர்ந்த அவ்வாடவர் கடந்த டிசம்பர் 28ஆம் தேதி லாவோஸின் வியண்டியானில் கைது செய்யப்பட்டார்.

இன்று அவர் தாய்லாந்திற்கு நாடு கடத்தப்பட்டார்.

போதைப்பொருள் கடத்தலுக்காக தாய்லாந்தில் அந்த நபர் மீது வழக்குத் தொடரப்படும் என்று ஃபானுரத் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset