நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

இக்ரா மதானி சங்கம் தண்ணீர் சேமிக்க பெரிய பைகள் கொடுத்து உதவி

பினாங்கு:

50 வருடங்களாக மாற்றப்படாத சுங்கை டூவா நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் இரண்டு பெரிய வால்வு அலகுகளை மாற்றுவதற்கும்  பினாங்கு முழுவதும் 22 இடங்களில்  நீர் ஒழுகும் குழாய்கள் மற்றும் பிற துணைப் பணிகள் மாநில நீர் விநியோகம் கழகத்தினர் தலைமையில் மாற்றி செப்பனிப்படவிருப்பதால் பயனீட்டாளர்கள் ஜனவரி 10 ஆம் தேதி காலை 6 மணி முதல் 14 ஆம் தேதி காலை 6 மணி வரை 96 மணி நேரம் திட்டமிடப்பட்ட தண்ணீர் தடையை எதிர்கொள்வார்கள் என்று பினாங்கு நீர் விநியோக நிறுவனம் PBA அறிவித்து இருந்தது.

ஆகையால் இப் பகுதிகளில் உள்ள மக்கள் போதுமான நீரை கையிருப்பை வைத்துக் கொள்ள ஏதுவாக சுங்கை பினாங்கு பகுதியில் வசிக்கும் சுமார் 200 குடும்பங்களுக்கு தண்ணீரை சேமித்து வைக்கும் பெரிய பைகளை  இக்ரா மதானி சங்கம் வீடு வீடாக சென்று கொடுத்து உதவியது. 

சங்கத்தின் தலைவர் டாக்டர் ஹாஜி அமீர் அலி அவர்கள் கூறுகையில் மக்கள் நாங்கள் கொடுத்த பைகளை மகிழ்ச்சியுடன்  வாங்கிக் கொண்டனர். 

காலத்தி னாற்செய்த நன்றி சிறிதெனினும்
ஞாலத்தின் மாணப் பெரிது 

என்ற குறளை போல் நாங்கள் செய்த உதவி சிறிதெனினும் அது சரியான நேரத்தில் செய்த உதவி. அது அவர்களுக்கு இந்த 4 நாட்களில் பெரிய உதவியாக இருக்கும் என்று நினைக்கின்றேன் என்று கூறினார். 

மேலும் நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் உள்ள பணிகள் மற்றும் மாநிலத்தின் பிற துணைப் பணிகளை சிறப்பாக செய்து கொண்டிருக்கும் மாநில அரசுக்கும், மாநில நீர் விநியோகம் கழகத்தினருக்கும் சங்கத்தின் சார்பாக வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் தெரிவித்துக்கொண்டார்.

- ஃபிதா 

தொடர்புடைய செய்திகள்

+ - reset