நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டு வர எதிர்க்கட்சிகள் வலுவாக இல்லை: பிரதமர்

கோலாலம்பூர்:

நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டு வர எதிர்க்கட்சிகள் வலுவாக இல்லை என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறினார்.

எனது தலைமையிலான ஒற்றுமை அரசாங்கத்தை கவிழ்க்கும் நோக்கில் பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

குறிப்பாக நாடாளுமன்றத்தில் அரசாங்கத்திற்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டு வரப்படும் என கூறப்படுகிறது.

இந்த நம்பிக்கையில்லா தீர்மானத்திற்காக நாங்களும் நீண்ட காலமாக காத்திருக்கிறோம்,

நாங்கள் ஆட்சிக்கு வந்து ஓராண்டுகள் ஆகிவிட்டது. ஆனால் நம்பிக்கையில்லா தீர்மானம் மட்டும் வரவே இல்லை.

இந்த இழுப்பறிக்கு நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டு வர எதிர்க்கட்சிகள் வலுவாக இல்லை என்பதே காரணம்.

ஆகையால் இது வெறும் வெட்டி பிரச்சாரம் மட்டுமே. இதில் எந்தவொரு உண்மையும் இல்லை.

ஆட்சிக்கு வர வேண்டும் என்றால் மக்கள் நம்மை தேர்வு செய்ய வேண்டும். ஆகவே அவர்களுக்காக உழைப்பதே எனது இலக்கு என்று பிரதமர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset