நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் கலைகள்

By
|
பகிர்

நெட்பிளிக்ஸ் ஒடிடி தளத்திலிருந்து நயன்தாராவின் அன்னப்பூரணி திரைப்படம் நீக்கம்

சென்னை: 

பிரபல ஒடிடி தளமான நெட்பிளிக்ஸ் தளம் லேடி சூப்பர் ஸ்டார் நடிகை நயன்தாராவின் அன்னப்பூரணி திரைப்படத்தை நீக்கியுள்ளது. இதனால் படக்குழுவினர் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். 

மத உணர்வுகளைப் புண்படுத்துவதாக எழுந்த புகாரையடுத்து, நயன்தாரா நடித்த அன்னப்பூரணி படம் நீக்கப்பட்டதாக நெட்பிளிக்ஸ் தரப்பிலிருந்து விளக்கம் அளிக்கப்பட்டது. 

மேலும், சர்ச்சைக்குரிய காட்சிகள் நீக்கும் வரை அன்னப்பூரணி திரைப்படம் நெட்பிளிக்ஸ் தளத்தில் இடம்பெறாது என்று அந்நிறுவனம் சொன்னது. 

ஜெய், நயன்தாரா நடிப்பில் வெளியான அன்னப்பூரணி திரைப்படத்தில் இடம்பெற்ற சர்ச்சைக்குரிய காட்சிகள் நீக்கப்படும் என்று படக்குழுவினர் அறிக்கை வாயிலாக தெரிவித்துள்ளனர்.

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

+ - reset