நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

தமிழ்நாட்டில் பெருந்தமிழன் ராஜராஜன் விருது டத்தோஸ்ரீ சரவணனுக்கு வழங்கி கௌரவிக்கப்பட்டது

சென்னை: 

மல்லைத் தமிழ்ச் சங்கத்தின் 14 ஆம் ஆண்டு விருதுகள் வழங்கும் விழா மலேசியா தமிழ் அறிஞர் ராஜேந்திரனின் மந்திரக் கணங்கள் நூல் வெளியீட்டு விழா மல்லைத் தமிழ்ச் சங்கத்தின் செயலாளர் கலைச் செம்மல் பாஸ்கர் தலைமையில் நடைபெற்றது 

இவ்விழாவின் சிறப்பு விருந்தினராக அமைச்சர் த.மோ. அன்பரசன் பங்கேற்று மலேசியா நாட்டின் சிறந்த ஆளுமைகள் தமிழர்களின் நம்பிக்கை நட்சத்திரமாக வளம் வரும் மலேசியாவின் முன்னாள் அமைச்சர் டத்தோஶ்ரீ டாக்டர் சரவணனுக்கும் மலேசியா தமிழ் எழுத்தாளர் சங்க அயலகத் தொடர்பு தலைவர் இராஜேந்திரனுக்கும்  மல்லைத் தமிழ்ச் சங்கத்தின் பெருந்தமிழன் ராஜா ராஜன் விருது வழங்கப்பட்டது.

மேலும்  மந்திரக் கணங்கள் நூலை அறிமுகம் செய்து வாழ்த்தி உரையாற்றினார் 

சூடிக்கொடுத்த சுடர்கொடி பாடிக் கொடுத்தால் நாற்பாமாலை பாதகங்கள் தீர்க்கும் பரமனடி காட்டும் வேதம் அனைத்துக்கும் வித்தாகும் கோதை தமிழ் ஐயைந்தும் ஐந்தும் அறியாத மானிடரை வையம் சுமப்பதும் வம்பு என்ற ஆண்டாள் நாச்சியாரின் திருமொழிக்கு இணங்க உலகளாவிய அளவில் தமிழுக்கு தொண்டாற்றி வரும் ஆளுமைகளுக்குத்தான் ஆண்டு தோறும் பெருந்தமிழன் ராஜராஜன் விருது வழங்கி மல்லைத் தமிழ்ச் சங்கம் சிறப்பித்துக் கொண்டு வருகிறது 

இதோ அந்த வரிசையில் மலேசிய நாட்டின் தவிர்க்க முடியாத அரசியல் சக்தி மஇகா துணைத் தலைவரும்  இளம் வயதிலேயே மலேசிய நாடாளுமன்ற மேலவை உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டவர் 

தொடர்ச்சியாக ஐந்து முறை தாப்பா நாடாளுமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்படார்.

கூட்டரசு பிரதேச துணை அமைச்சர்,  இளைஞர், விளையாட்டுத் துறை துணை அமைச்சர் மனிதவள அமைச்சர் என்று அப்பதவிகளுக்கு பெருமை சேர்த்தவர் 

கம்பனின் காதலனாக கண்ணதாசன் அறவாரியத் தலைவராக பொறுப்பேற்று தமிழுக்கு தொண்டாற்றி வரும் தமிழ் இலக்கியம் பேசும் மலேசிய அரசியல் ஆளுமை தமிழும் சமயமும் இவரின் இரு கண்கள் செந்தமிழ் சுடர் சொல்வேந்தர் டத்தோஸ்ரீ சரவணனுக்கு மல்லை தமிழ் சங்கத்தின் பெருந்தமிழன் ராஜராஜன் விருதை வழங்கி மகிழ்கின்றோம் என்றார்.

-பார்த்திபன் நாகராஜன் 

தொடர்புடைய செய்திகள்

+ - reset